சச்சின் டெண்டுல்கர் மட்டும் 4வது டெஸ்ட் போட்டியின்போது தனது 100வது
சதத்தை அடித்திருந்தால் அதை வைத்தே, இந்தியாவின் தோல்வியை அந்த நாட்டினர்
திசை திருப்பியிருப்பார்கள் என்று கூறியுள்ளார் இங்கிலாந்து அணியின்
முன்னாள் கேப்டன் நாசர் ஹூசேன்.
சிங்கம் சீறத் தயங்கியதால், இன்று சிறு நரிகள் எல்லாம் நாட்டான்மை பண்ணும் நிலைமைக்குப் போய் விட்டது இந்திய கிரிக்கெட் அணியின் நிலை. யார் யாரோ, கேலி கிண்டல் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது இந்திய கிரிக்கெட் அணி.
4வது டெஸ்ட் போட்டியின்போது சச்சின் டெண்டுல்கர் தனது 100வது சதத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தபோது துரதிர்ஷ்டவசமாக 91 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். இப்போது இந்த அவுட்டை வேறு மாதிரியான கோணத்தில் பார்த்து கருத்து தெரிவித்துள்ளார் நாசர் ஹூசேன்.
இதுகுறித்து அவர் கூறுகையில், சச்சின் தனது 100வது சதத்தை தவற விட்டது நல்லதுதான். இல்லாவிட்டால் இதை வைத்து இந்திய அணியின் மோசமான ஆட்டத்தையும், தொடர் தோல்விகளையும் இந்தியாவில் மறைத்திருப்பார்கள். சச்சின் சதமடிக்கத் தவறியதால் இந்திய அணியின் தோல்வி குறித்து சிந்திக்க அவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார் ஹூசேன்.
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், சச்சின் சதம் போட்டிருந்தால் ராகுல் டிராவிடன் அபாரமான ஆட்டமும், அவரது சிறப்பான முயற்சிகளும் கூட மறைக்கப்பட்டிருக்கும். இந்தத் தொடரில் சிறப்பாக ஆடிய ஒரே இந்திய வீரர் அவர் மட்டுமே. 3 சதங்களை அவர் போட்டதை, சச்சினின் ஒரு சதம் மறைத்து விட்டிருக்கும்.நல்ல வேளை அப்படி நடைபெறவில்லை.
எனவே சச்சின் சதத்தால் இந்தியாவின் உண்மை நிலை, எப்படி அது மோசமாக ஆடியது, எப்படி ராகுல் மட்டும் சிறப்பாக ஆடினார் என்ற உண்மைகள் மறைக்கப்பட்டிருக்கக் கூடும். அது நடைபெறாதது இந்திய அணிக்கு நல்லதுதான் என்றார் ஹூசேன்.
தொடர்ந்து அவர் கூறுகையில், இங்கிலாந்துக்கு இதுவரை சுற்றுப்பயணம் செய்த அணிகளிலேயே மிகவு்ம் மோசமாக ஆடிய அணி இந்தியாதான். இந்திய அணிக்கும், இங்கிலாந்து அணிக்கும் இடையிலான இடைவெளி மிகப் பெரிதாக உள்ளது என்றும் சாடினார் ஹூசேன்.

No comments:
Post a Comment