டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவை வீ்ழ்த்தியது போல, ஐந்து ஒரு நாள்
போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெல்லும், வெல்ல வேண்டும் என்று இங்கிலாந்து
கேப்டன் ஆண்ட்ரூ ஸ்டிராஸ் கூறியுள்ளார். நான்கு டெஸ்ட்
போட்டிகளிலும் இந்தியாவை வென்று விட்டதால் இங்கிலாந்து அணியை ஆஹா, ஓஹோவென
அத்தனை பேரும் புகழ்ந்து தள்ளி வருகின்றனர். தோல்வியே காணாமல் கம்பீரமாக
நடை போட்டு வந்த டோணி தலைமையிலான இந்திய அணி கடும் நெருக்கடிக்கும்,
அவமானத்திற்கும் உள்ளாக்கி விட்டது.
இந்த நிலையில் ஒரு நாள் போட்டித் தொடரிலும் அத்தனை போட்டிகளிலும் வெல்ல வேண்டும் என்று ஸ்டிராஸ் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியை வீழ்த்த இதுவே சரியான தருணம். எங்களிடம் பல ஆச்சரியகரமான விஷயங்கள் நிறையவே உள்ளன. ஒரு நாள் தொடரையும் வெற்றிகரமாக முடிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். டெஸ்ட் போட்டிகளைப் போலவே நாங்கள் ஒரு நாள் போட்டிகளிலும் இந்தியாவை வீழ்த்த வேண்டும், வீழ்த்துவோம். அதற்தான தகுதியும், திறமையும், உத்திகளும் எங்களிடம் உள்ளன.
சிறந்த பேட்ஸ்மேன்கள், சிறந்த பவுலர்கள், சிறப்பான பீல்டிங் எங்களிடம் உள்ளது. எனவே எங்களால் 5 ஒரு நாள் போட்டிகளிலும் வெல்ல முடியும் என்றார்.ஒரு நாள் போட்டிகளில் வல்லவர்களாக கருதப்படும் டோணி தலைமையிலான படையினர் ஸ்டிராஸ் சொல்வதை பொய்யாக்குவர்களா?. பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments:
Post a Comment