|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

24 August, 2011

லோக்பால் விவகாரத்தில் பாஜக அணுகுமுறைக்கு யஷ்வந்த் சின்ஹா, சத்ருகன் சின்ஹா கண்டனம்!

லோக்பால் விவகாரத்தில் பாஜக மிகவும் மென்மையான போக்கைக் கடைப்பிடித்து வருகிறது. இதை தீவிரமான பிரச்சினையாகவே அது கருதவில்லை. இந்த நிலை நீடித்தால் எங்களது எம்.பி பதவிகளை நாங்கள் ராஜினாமா செய்யத் தயங்க மாட்டோம் என்று பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹாவும், கட்சி எம்.பி சத்ருகன் சின்ஹாவும் கூறியுள்ளதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து யஷ்வந்த் சின்ஹா கூறுகையில், லோக்பால் விவகாரத்தில் வலுவான நிலையை எடுக்க பாஜக தவறி விட்டது. ஊழலுக்கு எதிரான போராட்டத்தை வலுவுள்ளதாக மாற்ற வேண்டியது முக்கியக் கட்சியான பாஜகவின் கடமையாகும். ஆனால் பாஜகவோ மிகவும் மென்மையான போக்கைக் கடைப்பிடித்து வருகிறது.

இந்த நிலை நீடித்தால் எனது எம்.பி. பதவியை நான் ராஜினாமா செய்து விட்டுப் போக வேண்டியதுதான் என்றார்.இதேபோல கருத்து தெரிவித்துள்ளார் சத்ருகன் சின்ஹாவும். இவர்களைத் தவிர பாஜக எம்.பி உதய் சிங்கும் கட்சிக்கு அதிருப்தியைத் தெரிவித்துள்ளார்.

யஷ்வந்த் சின்ஹாவும், சத்ருகன் சின்ஹாவும், உதய் சிங்கும், அத்வானி தலைமையில் நடந்த கட்சியின் நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது இந்த அதிருப்தியை பகிரங்கமாக தெரிவித்ததால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சத்ருகன் சின்ஹா கூறுகையில், காங்கிரஸைத் தாக்க கிடைத்த வாய்ப்பாக மட்டும் கருதிக் கொண்டு ஒப்புக்கு பேசி வருகிறது பாஜக. இது தவறு. இந்தப் பிரச்சினையை பாஜக தீவிரமாக அணுகியிருக்க வேண்டும் என்றார். இருப்பினும் யஷ்வந்த் சின்ஹா ராஜினாமா செய்வதாக கூறவில்லை என்று கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான எம்.எஸ்.அலுவாலியா கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...