தை முதல் நாள்தான்
தமிழர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு தொடங்கும் நாள். அந்த நாளை கொண்டாடி
மகிழ்ந்திடுவோம் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:
அ.தி.மு.க.
வெற்றி பெற்று பொறுப்புக்கு வந்தது முதல் திமுக ஆட்சியில் நிறைவேற்றபட்ட
முக்கிய திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் செயலில் தொடர்ந்து
ஈடுபட்டு வருகிறது. ஓமந்தூரார் வளாகத்தில் 500 கோடி ரூபாய் செலவில்
கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகக் கட்டடம் தரமாக இல்லை என்று கூறி, அதில்
செயல்படமாட்டோம் என்றனர். இப்போது அந்தக் கட்டடத்தில் மருத்துவமனை அமைக்கப்
போகிறோம் என்கின்றனர்.சமச்சீர் கல்வித் திட்டம் பற்றி
எதிர்க்கட்சிகள் கூறியதையெல்லாம் கேளாமல் செயல்பட்டு, உயர்நீதிமன்றம்
மற்றும் உச்சநீதிமன்றத்தில் குட்டுப்பட்டுக் கொண்டனர்.அதனால்
கோபமடைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றொரு நடவடிக்கையாக சித்திரை மாதம் முதல்
தேதிக்கு தமிழ்ப் புத்தாண்டை மாற்றிட பேரவையில் மசோதாவை
நிறைவேற்றியிருக்கிறார்.
23.1.2008 அன்று பேரவையில் ஆளுநர் தனது
உரையில், திருவள்ளுவர் ஆண்டு பிறக்கும் தை திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப்
புத்தாண்டுத் தொடக்கம் என்பதாகும். இது எல்லாத் தமிழறிஞர்களும்
ஒப்புக்கொண்டுள்ள உண்மை என்பதால் தை திங்கள் முதல் நாளை தமிழ்ப்
புத்தாண்டுத் தொடக்கம் என அறிவித்து நடைமுறைப்படுத்திட இந்த அரசு முடிவு
செய்கிறது.
எனவே, பொங்கல் திருநாளைத் தமிழர் திருநாளாகக் கொண்டாடி
வரும் தமிழக மக்கள், தமிழ்ப் புத்தாண்டு பிறந்த நாளாகவும் இணைந்து இனி
இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் கொண்டாடுவர் என்று அறிவித்தார்.இந்த அறிவிப்புக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், தமிழறிஞர் ஐராவதம் மகாதேவன், வைரமுத்து போன்றோர் பாராட்டினர். ஆளுநர் உரையைத் தொடர்ந்து 29.1.2008 அன்று தமிழ்ப் புத்தாண்டு சட்ட முன் வடிவை பேரவையில் நான் அறிமுகம் செய்தேன்.
இந்த
மசோதா மீதான விவாதத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈ.எஸ்.எஸ்.ராமன்,
பா.ம.க. சார்பில் கி.ஆறுமுகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்
என்.நன்மாறன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வை.சிவ புண்ணியம், மதிமுக
சார்பில் மு.கண்ணப்பன், விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கு.செல்வம்
ஆகியோர் வரவேற்று பேசி அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இப்படியெல்லாம் போற்றப்பட்டு 2008 -ம் ஆண்டு தை முதல் நாளே புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.இதற்கு முடிவு கட்ட அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பினை பா.ஜ.க. அவசரம் அவசரமாக வரவேற்றுள்ளது. அதிலிருந்தே இந்தத் தீர்மானத்தின் நோக்கத்தைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால்,
இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும், பா.ம.க. நிறுவனர் ராமதாஸýம்
கண்டித்திருக்கின்றனர். அவர்களுக்கு நான் நன்றியினை தெரிவிக்கிறேன். பேரவையில்
ஜெயலலிதா பேசும்போது, நாங்கள் எதைச் செய்தாலும், அதைச் சீரழிப்பதே
தி.மு.க.வின் வேலை என்று சொல்லியிருக்கிறார். அது தவறு. தி.மு.க. எதைச்
செய்திருந்தாலும், அதைச் சீரழிப்பதுதான் அ.தி.மு.க.வின் வேலை என்பதே
சரியாகும். அவர்கள் எப்படி வேண்டுமானாலும் செய்துவிட்டுப் போகட்டும்.
நம்பைப் பொறுத்தவரையில் தை திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு
தொடங்கும் நாள். அன்றைய தினம் தமிழர்களாக பிறந்த மக்களுக்கு ஓர் இனிய விழா.
அந்த நாளை உவகைப் பொங்கிட கொண்டாடி மகிழ்ந்திடுவோம் என்று அவர்
கூறியுள்ளார்.
இவனுக கைல மாட்டி நம்ம புத்தாண்டு பாவம் படாத பாடு...
No comments:
Post a Comment