மதுரா மாவட்டம் பர்சானா பகுதியை சேர்ந்த ரோஷினியும், பிஜேந்தரும் காதலித்தனர். இவர்கள் திருமணம் செய்து கொள்ள உதவ முயன்றவர் ராம்கிஷன். வேறு ஜாதி வாலிபனை திருமணம் செய்து கொள்ள முயன்ற இந்த ஜோடியையும், இதற்கு உதவிய ராம் கிஷனையும் கவுரவ கொலை செய்யும் படி, பஞ்சாயத்தார் உத்தரவிட்டனர். இதையடுத்து, கடந்த 91ம் ஆண்டு இந்த மூவரும், மரத்தில் தொங்கவிடப்பட்டு தீ வைத்து கொளுத்தப்பட்டனர். கவுரவ கொலை செய்பவர்களுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும், என, சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தது. இந்த வழக்கு தொடர்பாக போலீசார் 55 பேர் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர். 16 பேர் வழக்கு நடக்கும் காலத்திலேயே இறந்து விட்டனர். ஒருவர் தலைமறைவாகி விட்டார். மூன்று பேர் சிறுவர்கள் என்பதால் அவர்கள் மீதான வழக்கு, சிறார் கோர்ட்டில் நடக்கிறது.இதற்கிடையே, இந்த வழக்கை விசாரித்த மதுரா மாவட்ட செஷன்ஸ் கோர்ட் நீதிபதி ஏ.கே. உபாத்யாயா, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 34 பேரில், 15 பேருக்கு மரண தண்டனையும், 19 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். ஒருவர் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
No comments:
Post a Comment