சித்ரா பவுர்ணமியை தமிழக அரசு மத திருவிழாவாக அறிவித்துள்ளது. இதற்கு பக்தர்கள் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவுக்கு அடுத்தபடியாக மிகவும் விமர்சையுடன் கொண்டாடப்படும் திருவிழா சித்ரா பவுர்ணமி. இதில் லட்சக்கண்கான பக்தர்கள் கிரிவலம் வருவார்கள். சித்ரா பவுர்ணமியை தமிழக அரசு மத திருவிழாவாக அறிவித்துள்ளது. இதற்கு பக்தர்கள் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர். இது தொடர்பாக அவர்களது கருத்துக்கள் வருமாறு:-
ரமேஷ் (திருவண்ணா மலை கோவில் அர்ச்சகர்): தமிழ் மாதங்கள் 12 உள்ளது. அதில் முதல் மாதம் சித்திரை. அந்த மாதத்தில் வரும் பவுர்ணமி மிகவும் விசேசமானது. அன்று கிரிவலம் வந்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். தமிழக அரசு சித்ரா பவுர்ணமியை மதத்திருவிழாவாக அறிவித்துள்ளது மட்டற்ற மகிழ்ச்சி அளித்துள்ளது. இதற்காக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் கார்த்திகை தீப திருவிழாவுக்கு இந்து சமய அறநிலைதுறை மூலம் 70 சதவீத நிதியை அளித்ததற்கும் பாராட்டு தெரிவித்துக்கொள்கிறோம். தனுஷ் (முன்னாள் அறங்காவலர் குழு தலைவர்): இந்த அறிவிப்பு பக்தர்களிடம் மனநிறைவை ஏற்படுத்தி உள்ளது. சித்ரா பவுர்ணமி அன்று நிலவு மிக சக்தியை பெற்று இருக்கும். அன்று கிரிவலம் வந்தால் பக்தர்கள் கூடுதல் பலன்கள் பெறுவர். மதத்திருவிழாவாக அறிவிக்கப்பட்டதால் சித்ரா பவுர்ணமி விழாவுக்கு கூடுதல் மவுசு ஏற்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை வெளியிட்ட முதல்- அமைச்சர் ஜெயலலிதாவை பாராட்டுகிறோம். சங்கர் (இந்து முன்னணி மாவட்ட தலைவர்): சித்ரா பவுர்ணமி மத திருவிழாவாக அறிவிக்கப்பட்டுள்ளதால் சித்திரை 1-ந் தேதிதான் தமிழ் புத்தாண்டு என்று நிரூபணமாகி உள்ளது. இந்த அறிவிப்பால் சித்ரா பவுர்ணமி திருவிழாவுக்கு கூடுதல் நிதி உதவி கிடைக்கும். இது பக்தர்களுக்கு மேலும் பல வசதிகளையும், நற்பலன்களையும் வழங்கும். இதை இந்து முன்னணி மனதார வரவேற்கிறது என்று கூறினார்.
No comments:
Post a Comment