நில அபகரிப்பு வழக்கில் திமுக எம்.பி.யும், நடிகருமான ஜே.கே.ரித்தீஷ் இன்று கைது செய்யப்பட்டார். ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பாப்பாங்குழி என்ற கிராமத்தைச் சேர்ந்த சாமிக்கண்ணு என்பவர், காஞ்சிபுரம் மாவட்ட நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீஸில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், தனக்குச் சொந்தமான, ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள 1.47 ஏழு ஏக்கர் நிலத்தை, திமுக எம்.பியும், நடிகருமான ரித்திஷ் என்கிற சிவகுமார், போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து அதனை டெல்லியைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றுக்கு விற்றுவிட்டதாக குறிப்பிட்டிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீஸார், சாமிக்கண்ணுவின் கையெழுத்து மற்றும் கைரேகையை ரித்திஷ் போலியாக தயாரித்து மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, இன்று காலை சென்னை மயிலாப்பூரில் ரித்திஷை கைது செய்த போலீஸார், ஸ்ரீபெரும்புதூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ரித்தீஷை இம்மாதம் 30ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து, அவர் வேலூர் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
No comments:
Post a Comment