ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் ஏற்பட்ட இழப்பு ஒரு லட்சத்து 76 ஆயிரம்
கோடிதான் என்பதற்கான தனது விளக்கத்தை தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி வினோத்
ராய் இன்று பார்லி., கூட்டுக்குழு முன்பு ஆஜராகி தெரிவிக்கவுள்ளார். சி.ஏ.ஜி., முன்னாள் டைரக்டர் ஜெனரல் ஆர்.பி.சிங்., தனது வாக்குமூலத்தை
நேற்று அளித்தார். இவர் 2 ஆயிரத்து 600 கோடிதான் என்றும், ஏலம் விடும்
கொள்கையை அரசு பின்பற்றவில்லை. ஏலம் விட்டால்தான் 1 லட்சத்து 76 ஆயிரம்
கோடிக்கு போயிருக்கும்.இந்த இழப்பு கற்பனையான கணக்கு. மத்திய அரசின் கொள்கை
முடிவின்படி முந்தி வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில்
விற்கப்பட்டிருப்பதால், நிர்ணய நுழைவு கட்டண விலைப்படி 2 ஆயிரத்து 645
கோடிதான் இழப்பு என்றார்.
இந்த இழப்பு விவகாரத்தில் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடிதான் என்பதை
தெளிவுப்படுத்த வினோத்ராய் பார்லி., கூட்டுக்குழு முன்பு எந்த மாதிரியான
விளக்கம் அளிக்கப்போகிறார் என்று இன்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய
துணை தலைமை தணிக்கை அதிகாரி ரேகா குப்தாவும் விளக்கம் அளிக்கவிருக்கிறார். கடந்த வாரம் நடக்கவிருந்த பார்லி., கூட்டுக்குழுவில் அதிகாரிகள் விசாரணை
தனித்தனியாக நடத்தப்பட வேண்டும் என்ற கருத்தில் வேற்றுமை காரணமாக கூட்டம்
ஒத்தி வைக்கப்பட்டது.
No comments:
Post a Comment