பணக்காரர்களுக்கு மட்டும் பயன்படும் வகையில் அல்லாமல், ஏழைகளும் பயன்பெறும்
வகையில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இருக்க வேண்டும் என்று பிரதமர்
மன்மோகன் சிங் விருப்பம் தெரிவித்துள்ளார். தலைநகர் டில்லியில் நடைபெற்ற
நேஷனல் இன்னோவேசன் கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங்
கூறியதாவது, நாட்டு மக்கள் பயன்பெறும் வகையில் புதிய தொழில்நுட்பங்கள்
கண்டுபிடிக்கும் பொருட்டு, ரூ. 5 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த
திட்டத்திற்கு முதற்கட்டமாக, மத்திய அரசு ரூ. 100 கோடியை ஒதுக்கியுள்ளது.
விண்வெளி தொழில்நுட்பம், அணுசக்தி மற்றும் ஆட்டோமொபைல் துறையில் புதிய
கண்டுபிடிப்புகள் உருவாக்கப்பட வேண்டும். தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள்
பணக்காரர்களுக்கு (வசதி படைத்தவர்களுக்கு மட்டும் பயன்படும் வகையில்
உள்ளது. இது நாட்டின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கு எதிரானது.
ஏழைகளும் பயன்பெறும் வகையில், தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் அமைய
வேண்டும், அதுவே, நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் என்பதில் எந்தவொரு
மாற்றுக்கருத்துமில்லை.
வறுமை ஒழிப்பு, சுகாதாரம், விவசாயம்,
கால்நடைத்துறை, பசுமை தொழில்நுட்பம், கிராமங்களிடையேயான தொடர்பு
உள்ளிட்டவைகளுக்கு பெரிதும் பயன்படும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் அமைய
வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment