தற்சமயம் ஜனாதிபதி வசம் உள்ள கருணை மனுக்களின் முழு விபரத்தையும்
அளிக்கும் படி மத்திய அரசை சுப்ரீம் கோர்ட் கேட்டுக்கொண்டுள்ளது. கடந்த
1993ம் ஆண்டு டில்லியில் நடந்த குண்டுவெடிப்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட
தேவேந்தர் பால் சிங் முல்லர் என்பவரது கருணை மனு எட்டு ஆண்டுகளுக்குப்பின்
நிராகரிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சுப்ரீம் கோர்ட்டில்
முல்லர் மனு தாக்கல் செய்தார். இம்மனு நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி மற்றும்
முகோபாத்யாயா அடங்கிய பெஞ்ச் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மரண
தண்டனையை குறைக்கக் கோரி ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கருணை மனுக்களின் முழு
விபரத்தையும் மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் என
நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், கருணை மனுவை நிராகரிப்பை எதிர்த்து
இவ்வழக்கின் மனு தாரர் மனுதாக்கல் செய்தது போல், பலர் மனு தாக்கல் செய்ய
முடியாத நிலையில் உள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அவர்களுக்கு உதவ
பிரபல வக்கீல் ராம்ஜெத்மலானி மற்றும் ஆங்கி அர்ஜூனா ஆகியோரை
நியமித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment