திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள பெரியசாமி வணிக வளாகத்தில் சிலிக்கான் டெக்னாலஜி என்ற நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனத்தின் உரிமையாளர் உதயராஜ் மீது, திருச்சி புத்தூரைச் சேர்ந்த அருண் என்பவர் பொருளாதார குற்றப்பிரிவு ஆய்வாளர் புகழேந்தியிடம் கொடுத்த புகாரில், ரூ.1 லட்சம் டெபாசிட் செய்தால், 5 மாதங்களுக்கு தலா ரூ.20 ஆயிரமும், 5 மாதத்திற்கு பிறகு ரூ.1 லட்சம் திருப்பி தரப்படும் என்று விளம்பரம் செய்தார்கள். பாரக்ஸ் டிரேடிங் செய்து பணம் பெற்றுத்தருவதாக 56 லட்சம் வரை மோசடி செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், விசாரணை மேற்கொண்டதில், உதயராஜ் நடத்தி வந்த நிறுவனத்தில் 4 கோடி ருபாய் வரை ஏமாற்றியுள்ளது தெரியவந்தது.
இதுதொடர்பாக உதயராஜை போலீசார் தேடியபோது, அவர் தலைமறைவாகிவிட்டார். அந்த நிறுவனத்தில் வேலை செய்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தலைமறைவான உதயராஜை கைது செய்ய போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். உதயராஜ் தகப்பனார் பெருமாள், தம்பி சத்தியராஜ், நண்பர்கள் ராஜ்கமல், முருகேசன் ஆகியோரை கைது செய்து மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்துள்ளனர் போலீசார்.
No comments:
Post a Comment