உலகிலேயே இந்தியா தான் மிகவும் அசுத்தமான நாடு என்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் வருத்தம் தெரிவித்துள்ளார். பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பேசியதாவது, இந்திய மக்களிடையே சுகாதாரம் மற்றும் சுற்றுப்புறத் தூய்மை குறித்த விழிப்புணர்வு இல்லை. கிராமப்புறங்களில் இன்றைக்கும் மக்கள் கழிப்பறைகள் இல்லாததால் பொது இடங்களில் அசுத்தம் செய்கின்றனர். இந்தியா கல்வித் துறையில் தான் வெற்றி பெற்றுள்ளது. சுகாதாரம், ஊட்டச்சத்து, சுற்றுப்புறத் தூய்மை ஆகிய துறைகளில் இந்தியா இன்னும் வெற்றி காணவில்லை. ஏனென்றால் நம் நாடு தான் மிகவும் அசுத்தமானது. சுற்றுப்புறத் தூய்மை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகப் பெரிய சவாலாக உள்ளது. பொது இடங்களில் இயற்கை உபாதைகள் கழிப்பவர்களில் உலகிலேயே இந்தியாவில் தான் 60 சதவீதம் பேர் உள்ளனர். கிராமப்புறங்களுக்கு சென்றால் அங்குள்ள பெண்களிடம் செல்போன் இருக்கிறது. ஆனால் கழிப்பறை இல்லை. அப்படியே கழிப்பறை இருந்தாலும் அதை பயன்படுத்துவதில்லை என்றார்
No comments:
Post a Comment