தெற்கு ரயில்வேயில் ரூ. 35 கோடியில் 14 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடந்து வருவதாக சிக்னல் மற்றும் தகவல் தொழில்நுட்ப முதன்மை என்ஜினியர் மனோகர் தெரிவித்தார். நெல்லை ரயில் நிலையத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் கண்காணிப்பு கேமராக்கள் 26 இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. இதன் துவக்க விழா நெல்லையில் நடந்தது. மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் கோயல், கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளர் வெங்கடசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிக்னல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் முதன்மை இன்ஜினியர் மனோகர் கட்டுபாட்டு அறையை திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில் நெல்லையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் முலம் 24 மணி நேரமும் ரயில் நிலைய நிகழ்வுகளை கண்காணிக்கலாம். இதில் பதிவு செய்யப்படும் தகவல்களை 7 நாட்கள் வரை பெறலாம். தென்னக ரயில்வேயில் 35 கோடியில் 14 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. இதில் சென்னையில் 7 இடங்களிலும், திண்டுக்கல், மதுரை, சேலம், திருவனந்தபுரம், பாலக்காடு உள்ளிட்ட 14 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராவுடன் பயணிகளின உடைமைகளை ஸ்கேனிங் செய்யும் வசதியும் ஏற்படுத்தப்படுகிறது. இந்த வசதி நெல்லையிலும் ஏற்படுத்தப்படும் என்றார்.
No comments:
Post a Comment