நாட்டு நலனுக்கு எதிராக, மக்களுக்கு எதிராக, அரசியல் தலைவர்கள், அதிகாரிகளுக்கு எதிராக செயல்படுவதாகக் கூறி 5 செய்தி இணையதளங்களுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது. ஆனால், இலங்கை அரசின் இந்தச் செயலுக்கு ஊடக நிறுவங்கள் விமர்சித்துள்ளன. அமெரிக்க தூதரகம், இதனை ஜனநாயக விரோத நடவடிக்கை என்று கூறியுள்ளது. இலங்கை சட்டப்படி, எந்த செய்தி நிறுவங்களையும் தடை செய்ய வழியில்லை என்றாலும், அவற்றின் மீது அவதூறு வழக்குதொடுக்கலாம். இருந்தபோதும், இலங்கை செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் கனேகல, இந்தத் தடையை அறிவித்துள்ளார். இலங்கைச் செய்திகள் குறித்து எழுதும் எந்த ஒரு இணைய தளமும், இலங்கை அரசிடம் பதிவு செய்து கொள்ளவேண்டும் அல்லது அது சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று இலங்கை அரசு எச்சரித்திருக்கிறது. இந்த நிபந்தனை முட்டாளதனமானது என்று கூறிய மூத்த எதிர்க்கட்சிப் பிரமுகரான, மங்கள சமரவீர, அரசாங்கம் பயப்பீதியில் செயல்படுவதாக தெரிவித்தார்.
No comments:
Post a Comment