இந்தியாவிலேயே தமிழ் நாட்டுக்காரர்களிடம்தான ரொமான்ஸ் உணர்வு குறைவாக
இருக்கிறதாம். அதாவது தமிழகத்தில்தான் மிகவும் குறைந்த அளவில் காதல்
திருமணங்கள் நடக்கிறதாம்.
தேசிய குடும்ப சுகாதார மையம் நடத்திய சர்வேயில்தான் இந்தத் தகவல்
வெளியாகியுள்ளது. இந்திய அளவிலான காதல் திருமணங்களின் சராசரி 10 ஆக உள்ளது.
குறிப்பாக தென் மாநிலங்களிலேயே தமிழகத்தில்தான் மிகவும் குறைந்தஅளவிலான
காதல் திருமணங்கள் நடைபெறுகிறதாம். தமிழகத்தில் வெறும் 2.6 சதவீத காதல்
திருமணங்கள்தான், அதாவது கலப்பு திருமணங்கள்தான் நடக்கின்றனவாம்.
இந்த ஆய்வுக் கட்டுரையை குமுதின் தாஸ், கே.சி.தாஸ், டி.கே.ராய்,
பி.கே.திரிபாதி ஆகியோர் எழுதியுள்ளனர்.இந்த சர்வே முடிவை செய்தியாளர்களிடம்
வெளியிட்டவர் வேறு யாருமல்ல, சாட்சாத் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்
தலைவர் திருமாவளவன்தான்.
No comments:
Post a Comment