சென்னையில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய இயக்குநர் பாக்யராஜ், ‘’ஒரு ரீலை ஒருமுறை பார்த்துவிட்டு உடனே பின்னணி இசை அமைக்கும் அவர் வேகத்தையும், திறமையையும் இந்திப் பட இசை அமைப்பாளர்கள் உட்பட வேறு யாரிடமும் நான் கண்டதில்லை. எனது வெற்றிப் படமான அந்த 7 நாட்கள் முக்கிய கதாபாத் திரங்களான மாதவன் நாயரும், கோபியும் எம்எஸ்வியும் அவரது குழுவின் உறுப்பினர் பிரசாத்தையும் மனதில் கொண் டே வடிவமைக்கப்பட்டது’’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ’’இதுநாள் வரை தெரியாத ஓர் உண்மை, கவியரசு கடைசியாக கம்போசிங்கில் அமர்ந்தது, அந்த 7 நாட்கள் படத்தின், தென்றல் வந்து உன்னிடத்தில் என்ற பாடலின் பல்லவியே என்றும், அந்தப் பாடலின் சரணம் எழுதுவதற்கு நேரம் கிடைக்காமல் அமெரிக்கா போனதால், பாடலை முடிக்க முடியாமல் போனது’’ என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment