மகாராஷ்டிராவை சேர்ந்த 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து
கொன்றதற்காக ராஜூ பஸ்வான் என்ற பீகார் மாநிலத்தை சேர்ந்த நபர் கைது
செய்யப்பட்டான். போலீ்சார் விசாரணையின் போது மராட்டிய மாநிலத்தில்
பீகாரிகளுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக இதை செய்ததாக வாக்குமூலம்
கொடுத்திருந்தான்.
இந்நிலையில் கோல்காபுரில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய ராஜ்
தாக்கரே, "பீகார் மற்றும் உத்தர்பிரதேசத்தில் இருந்து மும்பைக்கு தினமும்
56 ரயில்கள் இயக்கப்படுகின்றன. வட இந்தியர்களை மகாராஷ்டிராவுக்குள் அதிகம்
நுழைவதற்கு ரயில்வே அமைச்சகம் உதவி செய்கிறது. மாநிலத்தில் நடைபெறும்
குற்றங்களுக்கு வெளிமாநிலத்தவர்கள் தான் காரணம் என்றார்
வெளிமாநிலத்தவர்கள் யாராவது நம் மாநிலப் பெண்களை தொட்டால் அவர்களது கைகளை
வெட்ட வேண்டும். இதற்கு கட்சி தொண்டர்கள் என்னிடம் அனுமதி கேட்கத்
தேவையில்லை. இவ்விவகாரத்தில் போலீசார், நவநிர்மான் சேனா தொண்டர்களின்
செயல்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்"
இவ்வாறு ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment