உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் மஹா கும்பமேளா திருவிழா நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவிற்கு இந்தியா முழுவதிலிருந்து இந்து மதக்குருக்களும், பக்தர்களும் என கோடிக்கணக்கானோர் இங்கு வந்து கங்கையில் புனித நீராடி செல்கின்றனர். நடிகை ரஞ்சிதாவுடன் கிசுகிசுக்கப்பட்ட சர்ச்சைக்குரிய சுவாமி நித்யானந்தா இந்த விழாவிற்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பே வந்து கலந்துகொண்டார். அவருக்கு நாகா சாதுக்களின் மஹாநிர்வானி அகாரா என்ற அமைப்பினர் மஹா மண்டலேஷ்வர் என்ற கௌரவ பட்டம் வழங்கப்பட்டது. தெற்கில் இருந்து வரும் தீர்க்கதரிசிகளுக்கு இந்த கௌரவ பட்டம் வழங்குவது மரபு என்று அப்போது அந்த அமைப்பினர் கூறினர். அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள், அவரது தனிப்பட்ட விசயமாக இருக்கிறது. இதில் மஹாநிர்வானி அகாரா ஒன்றும் செய்வதற்கில்லை என்றும் அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment