லோக்சபா சபாநாயகர் மீரா குமாரின் குடும்பத்தினர், டில்லியில் உள்ள அரசு
பங்களாவை ஆக்கிரமித்துள்ள வகையில், மத்திய நகர்ப்புற மேம்பாட்டு
அமைச்சகத்துக்கு, 1.98 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என, தகவல்
வெளியாகியுள்ளது.
முன்னாள் துணை பிரதமர் ஜெகஜீவன் ராமுக்கு, டில்லியில், அரசு பங்களா
ஒதுக்கப்பட்டிருந்தது. கடந்த 1986ல், இவர் மறைந்தார். ஆனாலும், அந்த
பங்களாவில், ஜெகஜீவன் ராமின் மனைவி இந்திராணி தேவி மற்றும் அவரின் மகளும்,
தற்போதைய லோக்சபா சபாநாயகருமான மீரா குமார் உள்ளிட்டோர் தொடர்ந்து
தங்கியிருந்ததாகவும், இந்த வகையில், அரசுக்கு அவர்கள் வாடகையாக, 1.98 கோடி
ரூபாய் செலுத்த வேண்டும் என்றும், தகவல் வெளியாகியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், சுபாஸ் சந்திர அகர்வால்
என்பவர் தாக்கல் செய்த மனுவுக்கு, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம்
அளித்த பதிலில், இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை, சபாநாயகர்
மீரா குமார் தரப்பு மறுத்துள்ளது. இதுகுறித்து, சபாநாயகர் அலுவலக வட்டாரங்கள் கூறுகையில், "இந்த
பங்களாவை, கடந்த 2002லேயே இந்திராணி தேவி குடும்பத்தினர் காலி செய்து
விட்டனர். இதுகுறித்த தகவலும், அப்போதே அரசுக்கு தெரிவிக்கப்பட்டு விட்டது'
என்றன.
No comments:
Post a Comment