|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

22 November, 2011

கட்டண உயர்வை எதிர்த்த வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் நோட்டீஸ்!


பேருந்து கட்டண உயர்வை எதிர்த்த வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு பேருந்து கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதால், ஏழை எளிய மக்கள் பெரும் தவிப்புக்கு ஆளாகியுள்ளதை சுட்டிக்காட்டி டிராஃபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் 21.11.2011 அன்று வழக்கு தொடர்ந்தார்.

நீதிபதிகள் தர்மாராவ், சுப்பையா ஆகியோரிடம் இந்த வழக்கை அவசரமாக விசாரிக்குமாறு மனுதாரர் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தனர். இதேபோல் வழக்கறிஞர் புகழேந்தியும் வழக்கு தொடர்ந்திருந்தார். அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. பேருந்து கட்டண உயர்வை எதிர்த்த வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 3 வாரத்தில் தமிழக அரசு பதிலை தாக்கல் செய்யுமாறும், இரண்டு பேரின் மனுக்களுக்கும் தனித் தனியே பதில் அளிக்குமாறும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...