சர்வதேச அளவில் முனன்ணி இணையதள நிறுவனமான யாகூ நிறுவனத்தின் இந்திய அங்கமான யாகூ இந்தியா நிறுவனம், டிவி சேனல்கள் மற்றும் பட தயாரி்ப்பு நிறுவனங்களுடன் இணைந்து இலவச ஆன்லைன் வீடியோ சேவையை அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த யாகூ இந்தியா நிறுவன நிர்வாக இயக்குனர் அருண் ததாங்கி கூறியதாவது, இந்தியாவில், சமீபகாலமாக ஆன்லைன் வீடியோ பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்த தருணமே, தாங்கள் இப்பிரிவில் களமிறங்குவதற்கு சிறந்த தருணமாக கருதி, இந்த சேவையை துவக்கி உள்ளோம். இந்தியாவில், 30 மில்லியன் பேர் ஆன்லைன் வீடியோ சேவையை உபயோகித்து வருவதாகவும், இதன்மூலம், ஒருவர், மாதம் ஒன்றிற்கு குறைந்தது 58 வீடியோக்களை கண்டுகளிப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. யாகூ இந்தியா நிறுவனம், என்டிடிவி, ஸ்டார் டிவி , ஷெமாரோ, ஹெட்லைன்ஸ் டுடே, பிவிஆர் பிக்சர்ஸ், அல்ட்ரா உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து செய்தி, பொழுதுபோக்கு, லைப்ஸ்டைல் மற்றும் திரைப்படங்கள் தொடர்பான வீடியோக்கள் இந்த சேவையின் மூலம் வழங்கப்பட உள்ளது. இதுமட்டுமல்லாது, யாகூ மூவிப்ளெக்ஸின் மூலம், முழு நீளத்திரைப்படங்களையும் இலவசமாக வழங்க உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment