பிரபல ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள உலகின் சக்திவாய்ந்த முதல் 20 பேர் பட்டியலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் இடம்பெற்றுள்ளனர். அதிகார பலத்தை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிட்டு முதல் 50 தலைவர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. ஒசாமா பின்லேடன் மற்றும் கடாஃபி ஆகியோரின் வீழ்ச்சியால் மிகுந்த செல்வாக்கு காரணமாக, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா முதல் இடத்தில் உள்ளார். இந்தப் பட்டியலில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 11-வது இடத்திலும், பிரதமர் மன்மோகன் சிங் 19-வது இடத்திலும் உள்ளனர். 'இரண்டு முறை பிரதமர் பதவியை ஏற்க மறுத்து, அதனை மன்மோகன் சிங்குக்கு விட்டுக்கொடுத்தவர்' என சோனியாவை ஃபோர்ப்ஸ் இதழ் குறிப்பிட்டுள்ளது. ' கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்வர்டில் பயின்ற 'ஊழல் கறைபடியாத' பொருளாதார வல்லுனர்' என பிரதமர் மன்மோகன் சிங் வருணிக்கப்பட்டுள்ளார். இந்தப் பட்டியலில் ரஷ்ய விளாடிமிர் புடின் இரண்டாவது இடத்திலும், சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ மூன்றாவது இடத்திலும் உள்ளனர்
No comments:
Post a Comment