தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அணைகள் மற்றும் ஆறுகளில் வெள்ளம் நிரம்பியுள்ளன. சிறு சிறு ஆறுகளில் உள்ள வெள்ளம் ஊருக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி உள்ளன.தமிழ்நாடு முழுவதும் மழையினால் பல்வேறு நிகழ்வுகளில் 30-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த பகுதி, வங்கக் கடலில் ஈரமான காற்றினை தமிழகத்தின் ஊடாக ஈர்ப்பபதால், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் அநேக இடங்களில் பலத்த மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழையை எதிர்பார்க்கலாம் என சென்னை வானிலை நிலையம் அறிவித்துள்ளது.குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை நாகப்பட்டினம், வேலூர் ஆகிய இடங்களில் பலத்த மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னையில் பாதிப்பு: வடகிழக்குப் பருவமைழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், சென்னையில் நேற்றிரவு விடிய விடிய கனமழை பெய்தது. இன்று காலையிலும் பலத்த மழை கொட்டியது. இந்தத் தொடர் மழைகாரணமாக சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதனால், காலை நேரத்தில் அலுவலகம் செல்பவர்கள் மிகவும் சிரமத்திக்குள்ளாகினர். மயிலாப்பூர், மந்தைவெளி, சாந்தோம், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் வெள்ளநீர் பெருக்கெடுத்துள்ளது. கீழ்ப்பாக்கம், கிண்டி, வடபழனி ஆகிய இடங்களில் காலை முதல் பெய்து வரும் கனமழையினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வியாசர்பாடி, வியாசர்புரம், கணேசாபுரம் பகுதிகளில் வெள்ளநீருடன் கழிவுநீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் அங்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. காலை முதல் மழை கொட்டிக் கொண்டே இருந்ததால் அலுவலகங்களுக்கு செல்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் சென்றவர்கள் அதிகம் அவதிக்குள்ளானார்கள்.

No comments:
Post a Comment