அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளதால், பெட்ரோலியப்பொருட்களை இறக்குமதி செய்வதில் கடும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் அவற்றின் மீதான விலையுயர்வு தவிர்க்க முடியாததாகிறது என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவன தலைவர் ஆர்.எஸ். படோலா கூறுகையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 46.29 என்ற அளவில் இருந்து ரூ. 49.40 என்ற அளவிற்கு குறைந்து விட்டதாக தெரிவித்தார். இதனால் பெட்ரோலியப்பொருட்களை இறக்குமதி செய்வதில் கடும்பாதிப்பு ஏற்படுகிறது. இந்திய பெட்ரோலியத்துறை 79 சதவீதம் இறக்குமதியையே சார்ந்துள்ளதால், இந்த விலையுயர்வு தவிர்க்க முடியாதது என்று அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment