|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

04 November, 2011

மாறுபட்ட பணிவாய்ப்புகளைத் தரும் படிப்புகள்!


மருத்துவம், பொறியியல், வர்த்தகம், தகவல் தொழில்நுட்பம் போன்ற பிரதான தொழில் சார்ந்த படிப்புகள் மட்டுமின்றி, சில மாறுபட்ட துறைகளிலும் வேலைவாய்ப்புகள் பெருகி வருகின்றன.மேற்கூறிய பிரதான தொழில்கள் சார்ந்ததாயினும் அவற்றில் பணிபுரிபவர்கள் தங்களின் பணிநிலையை உயர்த்திக் கொள்ளும் விதத்திலும் சில படிப்புகள் வழங்கப்படுகின்றன. அவற்றில் சில கீழே தொகுக்கப்பட்டுள்ளன.
செயல் அலுவலர்களுக்கான பொதுமேலாண்மை : இந்திய மேலாண்மை நிறுவனம் ஐ.ஐ.எம்.,- லக்னோ, எக்ஸியூட்டிவ்களுக்கான ஜெனரல் மேனேஜ்மென்ட் ஓராண்டுப் படிப்பை வழங்குகிறது. பணிபுரிந்து கொண்டிருப்பவர்களுக்கான இப்பாடத்திட்டம் நான்கு பிரிவுகளாக தலா 10நாட்கள் இடைவெளியில் நடத்தப்படும். இரண்டு தொடர் பிரிவுகளுக்குப்பின் 10 வார இடைவெளியில் அடுத்த பிரிவு நடத்தப்படும். நிர்வாக மேம்படுத்துதல் திட்ட தலைவர் சுசீல்குமார் கூறுகையில்,“மாணவர்கள் ஏற்கனவே பணிபுரிந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் சமகாலத்திய தொழிற்சாலைப் பிரச்னை தொடர்பான திட்டக்கருத்துரு ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டும். இப்பாடத்திட்டம் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான மேலாண்மை மாற்றங்களைக் குறித்து விளக்குவதாக அமையும்” என்றார். பட்டதாரியாகவும், குறைந்தபட்சம் ஐந்தாண்டு பணி அனுபவம் மிக்கவராகவும் இருத்தல் வேண்டும். கல்விக்கட்டணம் மூன்று லட்சத்து 50 ஆயிரம் ரூபாய். மேலும் விவரங்களுக்கு www.iiml.ac.in என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.
பிஸியோதெரபி: இந்திய உடல்நலத்துறையின் வர்த்தம் வரும் 2015ல், 50 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இத்துறை சார்ந்த பல்வேறு வேலைவாய்ப்புகளும் பெருகும். மிகவும் பிரபலமான பிஸியோதெரபிக்கு நல்ல எதிர்காலம் உண்டு. பரிதாபாத்தில் உள்ள மானவ்ரச்னா சர்வதேச பல்கலைக்கழகம் இரண்டாண்டு பிஸியோதெரபி படிப்பை வழங்குகிறது. இதே துறையில் இளநிலைப் படிப்பை 55 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். கல்விக்கட்டணமாக ஒரு லட்சத்து 8,500 ரூபாய் செலுத்த வேண்டும்.  40 மாணவர்கள் சேர்க்கப்படுவர். படிப்பை முடித்தவர்கள் ஆண்டுக்கு 2.4 லட்சம் ரூபாய் ஊதியமாகப் பெற வாய்ப்புண்டு.
எரிசக்தி மேலாண்மை: ஏற்கனவே இத்துறையில் இருப்பவர்களுக்கு பிரத்யேகமாக வார இறுதி நாட்களில் இப்படிப்பு பயிற்றுவிக்கப்படுகிறது. குர்கானில் உள்ள Great Lakes Institute of Energy Management &Research நிறுவனம் இப்படிப்பை வழங்குகிறது. இரண்டாண்டுப் படிப்பான இதற்கு 6 லட்சம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொடர்புடைய துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வரும் ஜனவரியில் இருந்து வகுப்புகள் துவங்குகின்றன. சேர்க்கை நடைமுறைகள் துவங்கியுள்ள நிலையில் வரும் டிச., 31ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 50 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர். கேட், ஜிமேட் தேர்ச்சி பெற்றிராதவர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்படும்.மேலும் விவரங்களுக்கு www.iemr.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.
ஏற்றுமதி மேலாண்மை: IIFT கொல்கத்தா மற்றும் டெல்லியில் இப்படிப்பு வழங்கப்படுகிறது. நான்கு மாத படிப்பான இதற்கு 55 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பட்டப்படிப்பு முடித்திருந்தால் போதுமானது. ஆன்லைனின் வார இறுதி நாட்களில் நேரடி ஒளிபரப்பு கற்பித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. நான்கு நாட்களுக்கு நேரடிப் பயிற்சி வகுப்பும் உண்டு. மேலும் விவரங்களுக்கு www.iift.edu என்ற இணைய தளத்தைப் பார்வையிடலாம்.
அழகுக் கலையியல்: வழக்கமான வேலைவாய்ப்புகளில் இருந்து விலகி மாறுதலான துறைகளைத் தேடுவோருக்கு இத்துறை நல்ல தேர்வு. இந்தியாவில் இத்துறை 2,000 கோடி ரூபாய் வர்த்தகத்தைக் கொண்டிருக்கிறது. ஆண்டுதோறும் 15 முதல் 20 சதவீத வளர்ச்சி பெறுகிறது என புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. தேர்ச்சி பெற்ற பணியாட்களுக்கான தேவை இத்துறையில் இருந்து கொண்டே இருக்கிறது. ஐதரபாத்தில் இருக்கும் அனூஸ் சர்வதேச அழகுக்கலை பள்ளி இரண்டாண்டு முதுகலைப் படிப்பை வழங்குகிறது. ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். நான்கு லட்சம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. படிப்பை முடித்தவர்கள் குறைந்தபட்சம் ஆண்டுக்கு 1.5 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டும் வாய்ப்புள்ளது.
டிஜிட்டல் கிராபிக் டெக்னாலஜி: எல்லாமே கம்ப்யூட்டர் மயமாகி விட்ட சூழலில், அதுதொடர்பான பணிகளுக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.  வரும் 2013ம் ஆண்டில் இந்திய அனிமேஷன் 4,375 கோடி வர்த்தகமுள்ள ஒரு துறையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படைப்பாக்கத்துறையில் நிறைய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். மும்பை ஜீ இன்ஸ்டிடியூட் ஆப் க்ரியேட்டிவ் ஆர்ட் மூன்றாண்டு இளநிலைப்படிப்பை வழங்குகிறது. பத்தாவது, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. இரண்டு லட்சம் ரூபாயில் இருந்து 3.5 லட்சம் ரூபாய் வரை செலவாகும். படிப்பை முடித்தவர்கள் துவக்கத்தில் ஆண்டுக்கு 1.5 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டலாம். மேலும் விவரங்களுக்கு www.zica.org என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.
வேளாண்மை: இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் வேளாண்துறையின் பங்களிப்பு மட்டும் 20 சதவீதம். இன்றும் மொத்த மக்கள்தொகையில் 62 சதவீதம் பேர், வேளாண் சார்ந்த தொழில் மூலமே வருவாய் ஈட்டி வருகின்றனர். ஜலந்தர் லவ்லி புரபஷனல் பல்கலைக்கழகம் இரண்டாண்டு முதுநிலை வேளாண் அறிவியல் படிப்பை வழங்குகிறது. இளநிலை அறிவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கல்விக்கட்டணம் 29 ஆயிரத்து 500 ரூபாய். 60 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர். படிப்பை முடித்தவர்கள் துவக்கத்திலேயே ஆண்டுக்கு மூன்று முதல் நான்கு லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டலாம். அரசுத்துறைகளிலும், ஆய்வகங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவுகளில் வேலைவாய்ப்பு பெறலாம்.
சிகை மற்றும் அலங்காரவியல்: சிகை அலங்காரம், அலங்காரக்கலை தொடர்பான இப்படிப்பு ஆறு மாத கால பயிற்சியாக வழங்கப்படுகிறது. டெல்லி, பி-பிளன்ட் அகாடமி -யில் இப்படிப்பை மேற்கொள்ள பத்தாம் வகுப்பு தேர்ச்சி, பிளஸ் 2 அல்லது பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கல்விக்கட்டணம் 1.75 லட்சம் ரூபாய். சலூன் தொடர்பான அனைத்து நிலைப் பயிற்சிகளும் இப்பாடத்திட்டத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...