தமிழக அமைச்சரவையை முதல்வர் ஜெயலலிதா இன்று திடீரென மாற்றியமைத்தார். 6 அமைச்சர்கள் நீக்கப்பட்டு, புதிதாக 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட கட்சி உறுப்பினர்களை விடுவிக்குமாறு காவல்துறைக்கு தொலைபேசி மூலம் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டால், அமைச்சர் பதவியில் இருந்து செந்தமிழன் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடவுள் (ஜெயலலிதா) இருக்கும் இடத்தில் காலணி அணியமாட்டேன் என்று சட்டப்பேரவையில் காலணிகள் அணியாமல் வந்த உதயகுமார், திருச்சியில் முதல்வர் ஜெயலலிதா பிராசரம் மேற்கொண்டபோது அதிகப்பிரசங்கித்தனமாக நடந்துகொள்ளதாக தெரிகிறது. நீலகிரி மாவட்டத்தில் ஒரு பிரிவினருக்கு மட்டுமே சலுகை காட்டி, மற்றவர்களை கண்டுகொள்ளாததாக புத்திசந்திரன் மீது புகார் கூறப்பட்டுள்ளது. செயல்பாடுகளில் அதிருப்தி காரணமாக, ஏனைய மூவரும் நீக்கப்பட்டதாக தெரிகிறது.
நீக்கப்பட்ட அமைச்சர்கள் விவரம்:
1. சி.சண்முகவேலு (ஊரக தொழில் துறை)
2. புத்திசந்திரன் (உணவுத் துறை)
3. ஆர்.பி. உதயகுமார் (தகவல் தொழில்நுட்பத் துறை)
4. சிவபதி (கால்நடை பராமரிப்புத் துறை)
5. சண்முகநாதன் (அறநிலையத் துறை)
6. செந்தமிழன் (செய்தி மற்றும் சட்டத்துறை)
புதிய அமைச்சர்கள் விவரம்:
1. பரஞ்சோதி (திருச்சி மேற்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்)
2. எஸ்.தாமோதரன் (கணத்துக்கடவு எம்.எல்.ஏ.)
3. வீ.மூர்த்தி (மாதவரம் எம்.எல்.ஏ.)
4. ஆர் காமராஜ் (நன்னிலம் எம்.எல்.ஏ.)
5. ராஜேந்திர பாலாஜி (சிவகாசி எம்.எல்.ஏ.)
6. சுந்தர்ராஜ் (பரமக்குடி எம்.எல்.ஏ.)
No comments:
Post a Comment