|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

04 November, 2011

இசை மூலம் சிகிச்சை! திருச்சி சுமதி சுந்தர் !!

இசை சிகிச்சை (மியூசிக் தெரபி) சேவை செய்யும் சுமதி சுந்தர்: என் சொந்த ஊர் திருச்சி. எங்கள் குடும்பமே இசை பாரம்பரியம் கொண்டது. நான் மூன்று வயதிலிருந்தே மேடைகளில் பாடி வருகிறேன். சங்கீதத்தில் எம்.ஏ., பட்டமும், மனோதத்துவத்தில் எம்.ஏ., பட்டமும், பெற்றுள்ளேன். தற்செயலாகத்தான் இசைச் சிகிச்சை பற்றி அறிந்தேன். அனைவரும் இசையை ஒரு பொழுபோக்காக பார்க்கும்போது, நாம் அதை அறிவியலாக பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. உடனே, அதற்கான ஆராய்ச்சியில் இறங்கி 10 ஆண்டுகள் முனைந்து முனைவர் பட்டம் பெற்றேன். இந்த உலகில் அனைத்தும் இசை வடிவமாகத்தான் உள்ளது. நம் இதயத் துடிப்பு, நாடித் துடிப்பு, ரத்த ஓட்டம், மூளையின் மின் அதிர்வுகள், அனைத்திலும் ஒரு இயைந்த, "ரிதம்' உள்ளது. அந்தக் குறிப்பிட்ட ரிதத்தில் மாறுதல் ஏற்படும்போது, உடல் நோய்வாய்ப்படுகிறது. அப்போது, மருந்து மாத்திரைகள், மாற்று சிகிச்சைகளுடன், இசைச் சிகிச்சையும் சேர்த்துத் தரும் போது, அதிசயத் தக்கப் பலன்கள் ஏற்படுகின்றன. பொதுவாக, பக்கவாதம், புற்றுநோய் போன்ற நோய்கள் இசைத் தெரபி மூலம் வெகுவாகக் கட்டுப்படுகின்றன. இதில், மேல் நாட்டு கருவிகளுடன், நம் ஊர் கோவில்களில் ஒலிக்கப்படும் உடுக்கை, மேளம், தபேலா போன்றவற்றையும் இசை சிகிச்சையில் பரவலாகப் பயன்படுகின்றன. ஆட்டிசம், மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கும், இசைச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள சில தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து இசைச் சிகிச்சை அளிக்கிறேன். இதன் மூலம், நோயாளிகளிடம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆர்வமும், மனிதநேயமும் உள்ளவர்களுக்கு முறைப்படி இந்த இசை சிகிச்சையை கற்றுக் கொடுக்கிறேன்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...