சென்னையில் சர்வதேச திரைப்பட விழாவை நடத்த, தமிழக அரசின் சார்பில் 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். இந்திய திரைப்படத் திறனாய்வுக் கழகம், 2003ம் ஆண்டு முதல் எட்டு ஆண்டுகளாக, "சென்னை சர்வதேச திரைப்பட விழா' என்ற பெயரில் டிசம்பர் மாதம் விழா நடத்தி வருகிறது. இந்த ஆண்டும், ஒன்பதாவது சென்னை சர்வதேச திரைப்பட விழா, டிசம்பர் 14 முதல் 22ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்விழாவில், 140 திரைப்படங்கள், ஒன்பது நாட்களில், ஐந்து தியேட்டர்களில் திரையிடப்பட உள்ளன. இந்த ஆண்டு நடக்கும் ஒன்பதாவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் செலவுகளுக்காக, தமிழக அரசின் சார்பில் 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, முதல்வர் ஜெயலலிதா, இந்திய திரைப்பட திறனாய்வுக் கழக இயக்குனர் தங்கராஜிடம் வழங்கினார். அப்போது, திரைப்பட நடிகர் சரத்குமார், நடிகை சுகாசினி, நடிகை லிசி ஆகியோர் உடனிருந்தனர். திரைப்பட விழாவை தலைமை வகித்து நடத்தித் தருமாறு, முதல்வரிடம் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
No comments:
Post a Comment