அடுத்த கல்வியாண்டு முதல் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு ட்ரைமஸ்வர் தேர்வு முறை அமல்படுத்தப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 12 மாதங்களில் சொல்லித்தரும் பாடங்களை 3 தேர்வுகளாக பிரித்து நடத்தப்பட உள்ளது. முதல் 4 நான்கு மாதங்களில் 1 தேர்வும், 2வது 4 மாதங்களில் 2வது தேர்வும், மற்றும் இறுதி 4 மாதங்களில் 3வது தேர்வும் நடைபெற உள்ளது. இம்மூன்று தேர்வுகளின் மதிப்பெண்களை மொத்தமாக கணக்கிட்டு முடிவில் தேர்ச்சி விகிதம் அறிவிக்கப்படும். இதன்மூலம், மாணவர்களின் படிக்கும் சுமை குறையும் என்று அரசு தெரிவித்துள்ளது. 9 மற்றும் 10 ம்வகுப்புகளுக்கு 2013-2014ம் ஆண்டு கல்வியாண்டில் இத்தேர்வ முறை அமல்படுத்தப்பட உள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment