சாலையோரங்களில் வசிப்பவர்களுக்கு இரவு நேர தங்கும் விடுதிகளை அமைக்கும்படி, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. "வீடு வசதியில்லாமல், சாலையோரங்களில் படுத்து உறங்குபவர்களுக்கு இரவு நேர விடுதிகளை கட்டி தர அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என சுப்ரீம் கோர்ட்டில் பொது நலன் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக் மிஸ்ரா "வீடு மற்றும் தங்கும் வசதியில்லாத காரணத்தால், சாலையோரங்களில் தங்கியுள்ள மக்கள் பலர், கடும் குளிரில் இறக்கின்றனர். திறந்தவெளியில் அவர்கள் படுத்து உறங்குவதை தடுத்து, இரவு நேர தங்கும் விடுதிகளை மாநில அரசுகள் கட்டிக் கொடுக்க வேண்டும். இதுகுறித்து மாநில அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கை அறிக்கையை, மாநில தலைமை செயலர்கள், அடுத்த மாதம் 3ம் தேதி கோர்ட்டில் சமர்பிக்க வேண்டும்' எனக்கூறி, இது தொடர்பான விசாரணையை அடுத்த மாதம் 9ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
No comments:
Post a Comment