|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

13 December, 2011

ஐந்து நோய்களுக்கு இனி ஒரே தடுப்பூசி...


ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளை ஐந்து நோய்களிலிருந்து காத்து சிசு மரணங்களை தடுக்கும் பெண்டா வேலண்ட் தடுப்பூசி வி.எச்.என்., மூலம் அளிக்கப்படுமென கலெக்டர் தெரிவித்துள்ளார்.குழந்தைகளை ஐந்து நோய்களிலிருந்து காப்பது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் மணிமேகலை தலைமை தாங்கினார். சுகாதார இணை இயக்குனர் உதயகுமார், துணை இயக்குனர்கள் மீரா(விழுப்புரம்), கீதா (கள்ளக்குறிச்சி) முன்னிலை வகித்தனர்.கூட்டத்திற்கு தலைமை தாங்கிய கலெக்டர் மணிமேகலை பேசியதாவது: இது வரை முத்தடுப்பு ஊசி, மஞ்சள் காமாலை ஊசி இவை தனித்தனியாக குழந்தைகளுக்கு போடப் பட்டது. தற்போது இந்த தடுப்பூசியுடன் நிமோனியோ மற்றும் மூளைக்காய்ச்சல் தடுப்பூசி சேர்த்து "பெண்டா வேலண்ட்' தடுப்பூசி ஒரே முறை போடப்படவுள்ளது. இதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் 5 வகை நோய்கள் தடுக்கப்படுகிறது.

இந்த தடுப்பூசி போடும் முகாம் விழுப்புரம் மாவட்டத்தில் வரும் 17ம் தேதி துவங்கப்படவுள்ளது. டிசம்பர் 21ம் தேதி காலை 9.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை மாவட்டம் முழுவதும் 557 கிராம சுகாதார செவிலியர்கள் மூலம் தகுதியுடைய ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படும். தொண்டை அடைப்பான், கக்குவான், இருமல், ரனஜன்னி, மஞ்சள் காமலை, நிமோனியா மற்றும் மூளைக் காய்ச்சல் ஆகிய நோய்களை தடுக்கும் வகையில் இந்த ஊசி அளிக்கப்படுகிறது. ஒரே ஊசியாக மூன்று முறை போடப்பட வேண்டும். குழந்தை பிறந்த 6வது வாரம், 10வது வாரம் மற்றும் 14வது வாரம் தடுப்பூசி போடப்பட வேண்டும். இதனால் ஆண்டுதோறும் 60 ஆயிரம் குழந்தைகள் மாவட்டத்தில் பயன்பெறும். இந்த தடுப்பூசி போடப்படுவதால் சிசு மரணங்கள் குறையும். ஒரு வயதிற்குள் உள்ள குழந்தைக்கு மட்டுமே இந்த தடுப்பூசி போடப்பட வேண்டும். இதில் பக்க விளைவுகள் எதுவும் கிடையாது. தடுப்பூசி போடவரும் கிராமப்புற சுகாதார செவிலியர்களுக்கு, தாய்மார்கள் போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...