இலங்கை முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் விடுதலைக்காக அமெரிக்க வெள்ளைமாளிகையின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் மூலமாக கையெழுத்து இடும் நடவடிக்கை தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொன்சேகாவின் விடுதலைக்காக அவரது மூத்த மகளான அப்ஸரா இந்நடவடிக்கையை ஆரம்பித்துள்ளார். இந்த இணையத்தள மனுவில் 25 ஆயிரம் கையெழுத்து பெறப்பட்டால் பொன்சேகாவின் விடுதலை குறித்து அமெரிக்க அரசு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்காக இதுவரை 15 ஆயிரத்து 613 கையெழுத்துகள் பெறப்பட்டுள்ளன. இந்த மாதம் 23 ஆம் தேதிக்குள் 25ஆயிரம் கையெழுத்துக்கள் பெறப்பட்டால் அவரது விடுதலைக் குறித்து ஆராயப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment