நாடு முழுவதும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் கடந்த செப்டம்பர் வரை 4 கோடிக்கு மேலானோர் வேலை கேட்டு பதிவு செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் 12.12.2011 அன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே இதைத் தெரிவித்தார். நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் ஆகிய இரு பகுதிகளிலும் சேர்த்து இத்தனை பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். நாட்டில் எந்த அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் உள்ளது என்பதையே இது காட்டுகிறது. "தேசிய வேலைவாய்ப்பு கொள்கை' வரைவை மத்திய வேலைவாய்ப்பு அமைச்சகம் வடிவமைத்துள்ளது. அமைப்புசார் துறையில் வேலைவாய்ப்பைப் பெருக்குவதும், அமைப்புசாரா துறையில் வேலையின் தரத்தை உயர்த்துவதுமே இதன் முக்கிய நோக்கமாகும் என்றும் மல்லிகார்ஜுன கார்கே
No comments:
Post a Comment