|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

05 January, 2012

திராட்சை விதையில் இருந்து உடல் நலம் பாதிக்காத சிகரெட்!

அமெரிக்கா நியூயார்க்கில் உள்ள கார்னல் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் புதிய வகை சிகரெட் ஒன்றை கண்டுபிடித்து உள்ளனர். திராட்சை விதையில் இருந்து இதை உருவாக்கி உள்ளனர். புகையிலையால் தயாரிக்கப்பட்ட சிகரெட் போல இந்த சிகரெட் உடல் நலத்தை பாதிக்காது.   புகையிலை சிகரெட்டில் விஷத்தன்மை கொண்ட ரசாயணம் உள்ளது. இதனால் புற்று நோய் ஏற்படுகிறது. ஆனால் புதிய வகை சிகரெட்டில் விஷதன்மை இருக்காது. இருந்தாலும் புகையிலை சிகரெட்டை புகைத்தால் என்ன உணர்வு ஏற்படுமோ அதே உணர்வு இந்த சிகரெட்டிலும் ஏற்படும். அதே நேரத்தில் புதிய சிகரெட் மூலம் புகையை உள்ளே இழுப்பதால் அதனால் சில பாதிப்பு ஏற்படும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆனால் புகையிலை சிகரெட் போல அதிக பாதிப்பு ஏற்படாது என்பதால் புகை பழக்கத்தை கை விட முடியாதவர்கள். புதிய சிகரெட்டை புகைக்கலாம் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...