பார்வையற்ற மாணவர்கள், பன்மொழி புத்தகங்களையும் எளிதாகப் படிப்பதற்கு வசதியாக, ஆன்லைன் முறையிலான பிரெய்லி நூலகம் திறக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதன்முறையாக, மும்பையில் திறக்கப்பட்டுள்ள இந்த ஆன்லைன் பிரெய்லி நூலகம், நாட்டிலுள்ள பல்வேறான கல்வி நிறுவனங்களில் மேற்படிப்பு படிக்கும் பார்வையற்ற மாணவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். பார்வையற்றவர்களுக்கான தேசிய கல்வி நிறுவனம்(NIVH) ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில், மத்திய சமூக நீதி அமைச்சர் முகுல் வாஸ்னிக், இந்த நூலகத்தை திறந்து வைத்தார். பயன்படுத்துவதற்கு எளிய முறையில், 10 மொழிகளில், 12,000 புத்தகங்கள் வரை இந்த நூலகத்தில் பெற முடியும். மேலும், தகவல்-தொழில்நுட்பம் முதல் இலக்கியம் வரையிலான பல்துறை அறிவினை இந்த நூலகம் மூலமாக வளர்த்துக்கொள்ளவும் முடியும்
No comments:
Post a Comment