தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவை மாவட்டத்தில் தற்போது ஆயிரம் பேருந்துகளுக்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதுதவிர வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து தினமும் மூவாயிரத்துக்கும் அதிகமான பேருந்துகள் வந்து செல்கின்றன. ஆனால், கடந்த 90 வருடங்களுக்கு முன் அதாவது, 1921ம் வருடத்தின் இறுதியில் கோவையில் ஒரே ஒரு பேருந்துமட்டுமே இயங்கி வந்தது. கோவையிலிருந்து உடுமலைபேட்டைக்கும், பின்னர் பழனிக்கும் சென்று வந்த அந்த பேருந்தில் முப்பதுக்கும் குறைவான இருக்கைகளே இருந்துள்ளது. பேருந்தின் மேல் தளம் இப்போது இருப்பதுபோல இல்லாமல், நான்கு ஓரங்களிலும் அமைக்கப்பட்டிருந்தன. அதில் மரத்தினால் செய்யப்பட்ட இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த பேருந்தின் முன்னால் என்ஜின் வடிவமைக்கப்பட்டு இருந்ததால் (இப்போது உள்ள பென்ஸ் லாரிபோல) இதை மூக்கு வைத்த வண்டி என்று பட்டப்பெயர் வைத்து மக்கள் கூப்பிட்டு வந்துள்ளனர்.
இந்த வண்டியின் ஓட்டுனர், நடத்துனர், உதவியாளர், உரிமையாளர் என எல்லா பொறுப்புகளையும் ஏற்று நடத்தியவர் கோபால்சாமி நாயுடுவின் மகன் துரைசாமி நாயுடு என்கிற ஜி.டி.நாயுடு அவர்கள் தான். இந்த பேருந்தை, தனது ஆசிரியரும், வழிகாட்டியுமான சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் என்ற ஆங்கிலேயரின் உதவியுடன் ஜி.டி.நாயுடு அவர்கள் இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்திருந்தார். அப்போதே பயணிகளுக்கு டிக்கெட் கொடுக்க தனியாக ஆள் வைத்துக் கொள்ளாமல் தானியங்கி டிக்கெட் முறையை ஜி.டி.நாயுடு அவர்கள் நடைமுறை படுத்தியிருந்ததாகவும், பயணிகளை கவர பேருந்தில் தேநீர் பழச்சாறு வகைகள்கொடுக்கப்பட்டதாகவும் கோவை சர்வஜன பள்ளியின் ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர் செந்தலை கவுதமன் தெரிவித்துள்ளார்.
இதற்க்கு முன்பாக, சென்னையிலிருந்து கோவைக்கு 1872 ஆண்டிலேயே தொடர் வண்டி போக்குவரத்து துவங்கி விட்டது. ஆங்கிலேய அரசு வருமான வரி என்ற பெயரில் ஜி.டி.நாயுடுவின் சொத்தில் 90 விழுக்காடு தொகையை வரியாக கேட்டதால், 1938 ஆம் வருடம் தன்னுடைய யுனைட்டேடு மோட்டார் சர்வீஸ் என்ற நிறுவனத்திலிருந்த பதினெட்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள தன்னுடைய பேருந்துகளை கோவை வட்டார போக்குவரத்து கழகத்தாரிடம் இலவசமாக ஒப்படைத்தார். கோவையில் பேருந்து போக்குவரத்து துவங்க காரணமாக இருந்த அந்த மேதை ஜி.டி.நாயுடு
No comments:
Post a Comment