சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் டான்செட் நுழைவுத் தேர்வு மார்ச் 31, ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் , அதன் கீழ் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் வழங்கும் முதுநிலை தொழிற் பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்க்க ஒவ்வொரு ஆண்டும் டான்செட் நுழைவுத் தேர்வினை நடத்தி வருகிறது . அதன்படி, வரும் கல்வியாண்டிற்கான நுழைவுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது . எம். பி . ஏ . படிப்பிற்கு மார்ச் 31 ம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரையும் , எம் . சி . ஏ . படிப்பிற்கு மார்ச் 31 ம் தேதி மதியம் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையும் தேர்வு நடத்தப்படுகிறது . எம். இ ., எம் . டெக் ., எம் . ஆர்க் ., எம் . பிளான் ., படிப்புகளுக்கு ஏப்ரல் 1 ம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை நுழைவுத் தேர்வு நடத்தப்படும் . இந்த நுழைவுத் தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள், பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் இருந்து ஆன்லைன் மூலமாகவோ அல்லது அண்ணா பல்கலை வளாகத்தில் நேரில் சென்றோ பெயரை பதிவு செய்து கொள்ளலாம் . தமிழகத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம், கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி , உட்பட 15 மையங்களில் இத்தேர்வு நடத்தப்படும் . மேலும் விவரங்களை அறிந்து கொள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் www.annauniv.edu இணையதளத்தைப் பார்க்கவும் .
No comments:
Post a Comment