|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

29 September, 2011

குமரியில் ரூ.2.25 கோடியில் ஒலி- ஒளி காட்சி கூடம்!


கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் 2.25 கோடி ரூபாய் மதிப்பில் ஒலி-ஒளி காட்சி கூடம் அமைக்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரியில் 2.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள ஒலி-ஒளி காட்சி கூடத்தில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது மத்திய அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், மதுரை மஹாலில் ஒலி-ஒளி காட்சி கூடம் இருப்பது போல் கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களிலும் அமைக்கப்படுகிறது.

சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை, பகவதியம்மன் கோயில், புனித அலங்கார உபகார அன்னை ஆலயம், திற்பரப்பு நீர்வீழ்ச்சி, பத்மநாபபுரம் அரண்மனை, மாத்தூர் தொட்டிப்பாலம், சொத்தவிளை கடற்கரை போன்ற சுற்றுலா தலங்களை பற்றி கன்னியாகுமரிக்கு வரும் அனைத்து சுற்றுலாபயணிகளும் அறியும் வகையில் ஒலி-ஒளி காட்சி கூடம் அமைக்கப்படுகிறது.

மாலை, 6 மணிக்கு துவங்கும் இந்த ஒலி-ஒளி காட்சிகள் தினமும், 2 காட்சிகளாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அலுவலக வளாகத்தில் கடற்கரையை ஒட்டியுள்ள இடத்தில் 200 பேர் அமரும் வகையில் காலரி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது ஜெனரேட்டர் அறை, புரெஜக்டர் அறை, கம்ப்யூட்டர் சாதனம் காமிரா போன்ற நவீன தொழில்நுட்பத்துடன் அமைய உள்ள இந்த ஒலி-ஒளி கூடத்தில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு பணி நடந்து வருகிறது. தமிழ், ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளில் இந்த காட்சி கூடம் அமைக்கப்பட்டு, இந்தாண்டு இறுதிக்குள் செயல்படுத்த சுற்றுலாத்துறை முயன்று வருகிறது.

குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட ஒருவர் கூட விடாமல் கடுமையாக தண்டிக்க வேண்டும்- வாச்சாத்தி பெண்கள்!


வாச்சாத்தி பாலியல் கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரையும் விடாமல், அனைவரையும் மிகக் கடுமையாக தண்டிக்க வேண்டும். எங்களது உடலிலும், மனதிலும் ஏற்பட்ட வலி அப்போதுதான் தீரும் என்று வாச்சாத்தி கொடூரத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர். வன்கொடுமையின் உச்சகட்ட வெறித்தனத்தை 19 ஆண்டுகளுக்கு முன்பு மலை கிராமமான வாச்சாத்தியில் வக்கிரத்துடன் நிறைவேற்றிய வனத்துறை, காவல்துறை மற்றும் வருவாய்த்துறையின் கோர வெறியாட்ட வழக்கில், இன்று தர்மபுரி கோர்ட் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

வாச்சாத்தியில் வெறியாட்டம் ஆடிய 269 பேரில் தற்போது 215 பேர்தான் உயிருடன் உள்ளனர். மற்றவர்கள் செத்துப் போய் விட்டனர். இந்த 215 பேர் மீதும் இன்று தர்மபுரி கோர்ட் தீர்ப்பளித்தது. ஒருவரையும் விடாமல் அத்தனை பேரையும் குற்றவாளிகள் என நீதிபதி அதிரடியாக தீர்ப்பளித்தார்.

இதுகுறித்து கோர்ட் வளாகத்தில் கூடியிருந்த பாலியல் பலாத்காரம், சித்திரவதை உள்ளிட்ட கொடுமைகளுக்கு ஆளான பெண்கள் கூறுகையில், எங்களை மனிதர்களாகக் கூட மதிக்காமல் அன்று வெறித்தனமாக நடத்தினர் காவல்துறையினரும், வனத்துறையினரும். அவர்கள் யாரையும் சும்மா விடக் கூடாது. அத்தனை பேருக்கும் கடுமையான தண்டனை தர வேண்டும் என்று நீதிபதி ஐயாவைக் கேட்டுக் கொள்கிறோம்.

அவர்களால் நாங்கள் பட்ட சித்திரவதை கொஞ்சநஞ்மல்ல, அதை வார்த்தையாலும் சொல்ல முடியாது. அன்று எங்களுக்கு ஏற்பட்ட உடல் வலியும், மன வலியும் இன்னும் கூட மறக்க முடியவிலல்லை. குற்றம் செய்த அத்தனை பேரையும் கடுமையாக தண்டித்தால் மட்டுமே எங்களது வேதனை தீரும் என்று கண்ணீருடன் கதறியபடி கூறினர்.

215 பேரும் குற்றவாளிகள் என்று கோர்ட் அறிவித்ததை கோர்ட் வளாகத்தில் கூடியிருந்த வாச்சாத்தி கிராம மக்கள் அமைதியுடன் வரவேற்றனர். அவர்களின் முழுக் கவனமும், கவலையும் குற்றவாளிகளுக்குக் கிடைக்கப் போகும் தண்டனை குறித்துதான் உள்ளது. இவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என்று அத்தனை பேரும் கோரியபடியும், தங்களது குல தெய்வமான மாரியம்மனை வேண்டிக் கொண்டும் உள்ளனர்.

அடைக்கலம் தேடிய 50 பேரை இலங்கைக்கு அனுப்பியது இங்கிலாந்து!

தனது நாட்டில் அடைக்கலம் தேடிச் சென்ற 50 பேரை இலங்கை நாட்டுக்கே திருப்பி அனுப்பியது இங்கிலாந்து அரசு. அடைக்கலம் தேடி வந்தவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இருக்காது என்று மனித உரிமை அமைப்புகள் எச்சரித்த போதும் அவர்கள் திரும்ப அனுப்பப்பட்டு உள்ளனர்.

 நாடுகடத்தப்பட்ட 50 பேரும் வியாழக்கிழமை காலை கொழும்பு வந்துச் சேர்ந்தனர். இதில் பெரும்பான்மையோர் தமிழர்கள் ஆவர். குறைந்த அளவில் சிங்களவர்களும், முஸ்லிம்களும் இதில் அடங்குவர்.  இலங்கையில் நான்காம் ஈழப் போர் நடந்த காலகட்டத்தில் பல தமிழர்கள் ராணுவத்துக்கு அஞ்சி பல்வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்தனர். அவர்களில் சிலர் இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் தேடினர். இவ்வாறு சென்ற மக்கள் குழுவில் சிலரை இங்கிலாந்து அரசு இலங்கைக்கே திரும்பி அனுப்பியுள்ளது.

 
2009-ம் ஆண்டு முடிவடைந்த உள்நாட்டுப் போருக்கு பின்பு இலங்கையில் நிலைமை சீரடைந்து விட்டதாக இங்கிலாந்து வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து இங்கிலாந்து எல்லை அமைப்பு தஞ்சம் கோரியவர்களை திருப்பி அனுப்பி வருகிறது. இந்த ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து இங்கிலாந்தில் தஞ்சம் கோரியவர்கள் திரும்ப அனுப்பப்படுவது இரண்டாவது முறையாகும்.  இலங்கைக்கு அவர்கள் திரும்ப அனுப்பப்பட்டால் அவர்கள் இலங்கை அரசால் சித்ரவதைக்கு உள்ளாவார்கள் என்றும் சில நேரங்களில் காணாமல் போய்விடுவதற்கும் வாய்ப்புள்ளது என்றும் பல்வேறு மனித உரிமை அமைப்புகள் எச்சரித்து இருந்தன. எனினும் இலங்கையில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தை அவர்கள் உதவிக்கு அணுகலாம் என்று இங்கிலாந்து கூறியுள்ளது.

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் புதிய ஆக்டோபஸ் இனம்!

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் புதிய ஆக்டோபஸ் இனத்தை தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

 இது தொடர்பாக இக்கல்லூரியின் மீன்வள ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க இயக்குநர் வை.கி. வெங்கடரமணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

 தூத்துக்குடி கடல் பகுதியில் உள்ள துடுப்புடைய மற்றும் ஓடுடைய மீன்களின் உயிரினப் பல்வகைமைப் பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டிருந்தபோது, கல்லூரியின் முதுநிலை ஆராய்ச்சியாளர் தி. வைத்தீஸ்வரன் புதிய மெல்லுடலி ஒன்றைக் கண்டறிந்துள்ளார். அந்த மெல்லுடலி, பழுப்புதாள் யானைக்கை (ஆர்கோனோடா ஹையன்ஸ்) என்ற ஓடுடைய பேய்க்கணவாய் (ஆக்டோபஸ்) ஆகும்.


 இப்புதிய மெல்லுடலியை, தூத்துக்குடி கடல் பகுதியில் 300 முதல் 310 மீ. ஆழத்தில் அவர் சேகரித்துள்ளார். புற அமைப்பு மற்றும் ஓடு அமைப்பின் அடிப்படையில் இவ்வுயிரினமானது ஆர்கோனோடா ஹையன்ஸ் என்ற ஓடுடைய பேய்க்கணவாய் சிற்றினத்தைச் சேர்ந்தது என உதவிப் பேராசிரியர் ந. ஜெயக்குமார் இனம் கண்டறிந்துள்ளார்.  இந்தியாவை பொறுத்தவரை இந்த உயிரினம் தற்போதுதான் முதன் முதலாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது, மெல்லுடலிகள் தொகுப்பின் கீழ்வரும் தலைக்காலிகள் வகுப்பைச் சேர்ந்தது.  இது 15.4 செ.மீ., நீளமும் 15 கிராம் எடையும் கொண்டுள்ளது. உலகளவில் இதுவரை நான்கு ஓடுடைய பேய்க்கணவாய் இனமானது வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டலப் பகுதியில் இருந்து பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


 இந்த உயிரினத்தின் ஓடானது யானைக்கை என்றழைக்கப்படும் நாட்டிலஸ் இனத்தின் ஓட்டைப்போல் தோற்றமளித்தாலும், இவை ஓடுடைய பேய்க்கணவாய் வகையைச் சார்ந்தவை.  இதன் ஓடானது தாளை போன்று மெல்லியதாகவும், பழுப்பு நிறத்துடனும் இருப்பதால் பழுப்புத்தாள் யானைக்கை என அழைக்கப்படுகிறது.  இவை,மீன்களை உண்டு வாழும். இவை ஜெல்லி மீன்களை ஒட்டி வாழும். பெண் இனத்துக்கு மட்டுமே ஓடு உள்ளது. ஆண் இனம் உருவில் மிகச்சிறிய அளவிலே உள்ளது என்றார் அவர்.

இந்தியாவுடனான தடையற்ற வாணிபம் கைவிடப்படும் ஐரோப்பிய யூனியன்!

தடையற்ற வாணிப ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளை முறித்துக் கொள்வோம் என்று ஐரோப்பிய யூனியன் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளது.

 வாணிப ஒப்பந்தத்தில் பல்வேறு விஷயங்களில் இந்தியாவுடன் கருத்தொற்றுமை ஏற்படாததை அடுத்து ஐரோப்பிய யூனியன் இவ்வாறு கூறியுள்ளது.  ஆண்டுதோறும் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு நடைபெற திட்டமிடப்பட்டுள்ள இந்த வாணிப ஒப்பந்தப் பேச்சு முறிந்தால் இந்தியாவுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும்.

 
தில்லியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் இது தொடர்பாக இந்தியாவுக்கும் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கும் இடையே பேச்சு தொடங்கியது. இந்நிலையில் இது தொடர்பாக 2012- பிப்ரவரிக்குள் இறுதி முடிவு எடுக்க வேண்டுமென ஐரோப்பிய யூனியன் நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் கூட்டத்தில் கெடு விதிக்கப்பட்டுள்ளது.  இந்தியா இறுதி முடிவு எடுக்காவிட்டால், இந்த ஒப்பந்தம் பொது விவாதத்துக்கு வரும். இது தொடர்பாக இந்தியாவுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது என்று ஐரோப்பிய யூனியன் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 
27 நாடுகள் உள்ள ஐரோப்பிய யூனியனில் டென்மார்க் மட்டுமே இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஐரோப்பிய யூனியன் வர்த்தகப் பிரிவு ஆணையர் கார்ல் டி குசட், "மலையளவில் சிக்கல் எழுவதால் இந்தியாவுடன் தடையற்ற வாணிப ஒப்பந்த பேச்சை நிறுத்திக் கொள்ளலாம் என்று ஐரோப்பிய யூனியன் நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்' என்றார்.  முக்கியமாக கார், ஒயின் உள்ளிட்ட பானங்கள், பல்வேறு சேவைகள் தொடர்பாக இந்தியாவுக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையே தடையற்ற வாணிப ஒப்பந்தப் பேச்சு நடைபெற்று வந்தது.  இரு தரப்பு வர்த்தகத்தை 2015-ல் ஆண்டுக்கு ரூ.11 லட்சத்து 85 ஆயிரம் கோடி வரை உயர்த்தவும் திட்டமிடப்பட்டிருந்தது. 2010-ல் 4 லட்சத்து 60 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.

எங்கேயும் எப்போதும் சரவணனை பாராட்டிய அமீர் கான்!

எங்கேயும் எப்போதும்" படத்தை பார்த்து, ஏ.ஆர்.முருகதாஸிடமும், அவரது உதவியாளரும், படத்தின் இயக்குநருமான சரவணனை வெகுவாக பாராட்டினாராம் பாலிவுட் ஸ்டார் அமீர் கான். அமீர்கானுக்கு இந்தியில் கஜினி என்ற மாபெரும் ஹிட் படத்தை கொடுத்தவர் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ். அப்போது முதலே ஏ.ஆர்.முருகதாஸ் மீது மிகுந்த பற்று கொண்டுள்ளார் அமீர் கான். இந்நிலையில் சமீபத்தில் வெளிவந்த ஏ.ஆர்.முருகதாஸின் முதல்பட தயாரிப்பான எங்கேயும் எப்போதும் படத்தை பார்த்துள்ளார் அமீர்கான். படம் ரொம்பவே அவரை கவர்ந்துவிட்டதாம், உடனே ஏ.ஆர்.முருகதாசை தொடர்பு கொண்டு, படம் ரியலி் சூப்பர். படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு ஆர்ட்டிஸ்ட், படத்தின் கதை, அது சொல்லப்பட்ட விதம் என ஒட்டு மொத்தமும் சூப்பர் என்றாராம் அமீர். கூடவே படத்தின் இயக்குநர் சரவணனையும் போனில் தொடர்பு கொண்டு வாழ்த்தினாராம். மேலும் இந்தபடத்தை தனது பேனரிலேயே இந்தியில் ரீ-மேக் செய்ய ஆர்வம் இருப்பதாகவும் கூறியிருக்கிறார். அமீர் கானின் வாழ்த்து மழையால், ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறாராம் சரவணன்.

பயங்கரவாதத்தை சகித்துக்கொள்ள வேண்டாம்: ஐ.நா!

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத எதிர்ப்பு கமிட்டிக் கூட்டம் இந்தியா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. அக்கூட்டத்தில் எந்தச் சூழலிலும் பயங்கரவாதத்தை சகித்துக்கொள்ள வேண்டாம் என உறுப்பு நாடுகளை பாதுகாப்பு கவுன்சில் கேட்டுக் கொள்ளும் என அறிக்கை வெளியிடப்பட்டது.

 
தங்கள் நாட்டில் தங்க பயங்கரவாதிகளை அனுமதிக்காமல் நீதியின் முன் அவர்களை நிறுத்துங்கள் என்று அந்த அறிக்கை கேட்டுக்கொண்டது. பயங்கரவாதத்தைத் தடுக்கவும் அதை எதிர்த்துப் போராடவும் உறுப்பு நாடுகள் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிக்கை கேட்டுக்கொண்டது.

 பயங்கரவாத எதிர்ப்புக் கமிட்டி தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் விதத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியொன்றில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

 
மேலும், செப்டம்பர் 11-ம் தேதி நடந்த அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் மீதான தாக்குதலுக்கு எதிராக பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றி 10 ஆண்டுகள் ஆவதையும் இந்நிகழ்ச்சி குறித்தது.  எல்லைப் பகுதிகளை தகுந்த கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் பயங்கரவாதிகளின் ஆயுத நடமாட்டத்தை தடுப்பதில் உறுப்பு நாடுகள் ஆர்வம் காட்ட வேண்டும் என்றும் அந்த அறிக்கை கேட்டுக்கொண்டது.

 
 சில அறக்கட்டளை நிறுவனங்களுக்குச் சென்று சேரும் நிதி பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படாமல் இருப்பதை உறுப்பு நாடுகள் உறுதி செய்ய வேண்டும். பயங்கரவாத நடவடிக்கையின் நோக்கம் எதுவாக இருந்தாலும், பயங்கரவாதம் ஒரு குற்றமே; அதை நியாயப்படுத்த முடியாது என்பதை உறுப்பு நாடுகள் உறுதி செய்யவேண்டும் என்று அறிக்கை கேட்டுக்கொண்டது.

 போதைப் பொருள் கடத்தல், ஆயுதக் கடத்தல் மற்றும் ஹவாலா தொழிலில் ஈடுபடுதல் போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபட்டுவரும் சர்வதேசக் கும்பல்களுக்கும் பயங்கரவாதக் குழுக்களுக்கும் உள்ள தொடர்பு குறித்து அறிக்கை கவலை தெரிவித்தது.

 
பயங்கரவாத எதிர்ப்புக் கமிட்டி உருவாகி 10 ஆண்டுகள் ஆன பின்னரும் தேசிய, சர்வதேச, பிராந்திய அளவில் செய்யவேண்டியவை நிறைய உள்ளன என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டியது.  நிகழ்ச்சியில் பங்கேற்ற ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன், அமெரிக்கா மீதான தாக்குதல் நடந்து 10 ஆண்டுகள் ஆன பின்னரும் பயங்கரவாதம் முக்கிய ஆபத்தாக இன்னமும் உள்ளது. இந்த ஆபத்தால் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரை இழக்கின்றனர். பிராந்திய இணக்கம் குலைகிறது என்று கவலை தெரிவித்தார்.

 

நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ஹர்தீப் சிங் புரி, பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம் உறுப்பு நாடுகளிடையே ஓர் ஒற்றுமையை உருவாக்கியிருக்கிறது. சர்வதேச பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தையை சாத்தியமாக்கியிருக்கிறது என்றார்.  பயங்கரவாதத்தை சகித்துக்கொள்ளாமல் இருப்பது என்பது, பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்தல், தங்கள் மண்ணைப் பயன்படுத்த பயங்கரவாதிகளை அனுமதித்தல் ஆகியவற்றுக்கு எதிரானது என்றார் ஹர்தீப் சிங்.

சவாலாகும் தேமுதிக - கம்யூனிஸ்ட் கூட்டணி!

கோவை மாநகராட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு சவால் விடும் வகையில் தேமுதிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கூட்டணி அமைந்துள்ளது.

 அதிமுக, திமுக, காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட பிரதான கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதால் கோவை மாநகராட்சித் தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

 
ஆளும்கட்சி சார்பில் முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி, திமுக சார்பில் துணை மேயர் நா.கார்த்திக், மதிமுக சார்பில் ஆடிட்டர் அர்ஜுன்ராஜ், மார்க்சிஸ்ட் சார்பில் யு.கே.சிவஞானம், காங்கிரஸ் சார்பில் ஆர்.சின்னையன், போட்டி வேட்பாளராக மாவட்ட துணைத் தலைவர் பச்சமுத்து, கொமுக-பாஜக கூட்டணி சார்பில் ஜி.கே.செல்வகுமார், பாமக சார்பில் கே.ராஜேந்திரன் ஆகியோர் மேயர் வேட்பாளர்களாகக் களத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

 தேமுதிக மற்றும் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. கோவை மாநகராட்சி மேயர் பதவியை, கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கட்சிக்கு தேமுதிக விட்டுக் கொடுத்துள்ளது.

 கடந்த 2006 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக அநேக இடங்களில் தோல்வி அடைந்தாலும், கோவை மாவட்டத்தில் 9 இடங்களில் வெற்றி பெற்றது.

 ஆனால், தேர்தலுக்கு அடுத்து 2 மாத இடைவெளியில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் 72 வார்டுகளுக்கு நடந்த தேர்தலில் அதிமுக வெறும் 10 இடங்களை மட்டும் பிடித்தது. மாநிலம் முழுவதும் ஒரு மேயர் பதவியில் கூட வெற்றி பெறவில்லை.

 
அமோக வெற்றி பெற்ற அதிமுக: ஆனால், 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் 10-க்கு 10 இடங்களையும் பிடித்து அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தேர்தலில் பெற்ற வெற்றியால் உற்சாகத்தில் இருக்கும் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி களம் இறக்கப்பட்டுள்ளார். மேயர் மற்றும் வார்டு உறுப்பினர்களில் ஆளும்கட்சியாக உள்ள அதிமுகவுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என அக்கட்சியினர் கணக்குப்போட்டு வேலை செய்யத் தொடங்கி விட்டனர்.

 அண்மையில் டாஸ்மாக் கடைகளை ஏலம் எடுத்த பலர், அதிமுகவில் வார்டு உறுப்பினர்களுக்கான வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருப்பது அக்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 திமுகவை பொறுத்தவரையில் தெற்கு மண்டலத் தலைவர் பைந்தமிழ் பாரி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலரும் நிலப்பறிப்பு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவங்கள் திமுகவினரிடையே சோர்வை உண்டாக்கி இருப்பதும், அதிமுகவுக்கு சாதகமாகவே இருக்கும் என பேசப்படுகிறது.

 
ஏற்கெனவே துணை மேயராக உள்ள நா.கார்த்திக், திமுகவில் மேயர் வேட்பாளராக களம் இறக்கிவிடப்பட்டுள்ளார். திமுகவினர் மீதான நிலப்பறிப்பு வழக்குகள், கோவையில் நிறைவேறாத பாதாள சாக்கடைத் திட்டம், பில்லூர் குடிநீர்த் திட்ட பணிகள் சுணக்கம் ஆகியவை அக்கட்சிக்கு பாதகமாகவே இருக்கும் என கருதப்படுகிறது.  மேலும் 2011 சட்டப் பேரவைத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட திமுக வெற்றி பெறாததும் அக்கட்சிக்கு பலத்த பின்னடைவாக உள்ளது.  2006 உள்ளாட்சித் தேர்தலின்போது கோவை மாநகராட்சியில் உள்ள 72 வார்டுகளில் திமுக-29, அதிமுக-10, காங்கிரஸ் -8, மார்க்சிஸ்ட்-7, மதிமுக -2, பாஜக-1, கம்யூனிஸ்ட் -4, தேமுதிக -3, சுயேட்சை-8 என உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர். இப்போது மறுசீரமைப்பில் 100 வார்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளன.

 மார்க்சிஸ்ட் கட்சிக்கு கோவையில் கணிசமான அளவுக்கு செல்வாக்கு உள்ளது. 

 
அக்கட்சியைச் சேர்ந்த பி.ஆர்.நடராஜன், கோவை நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யாக உள்ளதும், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொழிற்சங்கங்க வாக்குகளும், புத்தெழுச்சி பெற்று வரும் தேமுதிகவின் வாக்குகளும் அக்கட்சிக்கு பலம் சேர்க்கிறது.  தேமுதிக, மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் ஆகிய 3 கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதால் திமுகவுக்கு அடுத்து அதிமுகவுக்கு சவால் விடும் அணியாக தேமுதிக தலைமையிலான கூட்டணி அமைந்துள்ளது.  காங்கிரஸ் கட்சியில் 2 மேயர் வேட்பாளர்கள்: காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.சின்னையன் மேயர் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். ஆனால்,

 
கோஷ்டி பூசல் காரணமாக அதிருப்தி வேட்பாளராக அக்கட்சி சார்பில் பச்சமுத்து திடீரென மேயர் வேட்பாளருக்கு மனு செய்துள்ளார். கோஷ்டிபூசல் உள்ளது என்பதை மேயர் வேட்பாளர் வேட்புமனு தாக்கலிலும் வெட்டவெளிச்சமாக்கியுள்ளது காங்கிரஸ் கட்சி.  மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் மற்றும் ஆர்.பிரபு அணி என பிரிந்து நிற்கும் காங்கிரஸ் கட்சியில், இப்போது இரண்டு பேர் மேயர் வேட்பாளராக களத்தில் உள்ளனர்.

 
மதிமுகவில் அர்ஜுன்ராஜும், கொமுக-பாஜக கூட்டணி சார்பில் பாஜகவின் மாநிலச் செயலாளர் ஜி.கே.செல்வகுமாரும் போட்டியிடுகின்றனர். கவுண்டர் சமூகத்தினரின் வாக்குகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கொமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக களத்தில் இறங்கியுள்ளது.  எல்லா உள்ளாட்சித் தேர்தல்களிலும் ஆளும் கட்சியே வெற்றி பெற்று வந்துள்ளது. இந்த முறை வெற்றி பெறப் போவது ஆளும் கட்சியான அதிமுகவா அல்லது திமுகவா அல்லது கழற்றிவிடப்பட்ட கூட்டணிக் கட்சிகளா என்பது உள்ளாட்சித் தேர்தல் முடிவில் தெரியவரும்.

ஆசிரியைகளின் பாலியல் அத்துமீறல்கள்!



கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த 4 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்களை மேற்கொண்ட இரு ஆசிரியைகள் குறித்து அந்த சிறுமி கூறியதைக் கேட்கும் போது காது கூசிப் போய் விடும். அந்த அளவுக்கு அறுவறுக்கத்தக்க வகையில் இரு ஆசிரியைகளும் நடந்து கொண்ட விதம் அனைவரையும் கொதிப்படைய வைப்பதாக உள்ளது. கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகள்தான் 4 வயது ஷாலினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஷாலினி அப்பகுதியில்உள்ள புகழ் பெற்ற ஏகேடி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் யுகேஜி படித்து வந்தாள்.

இந்த நிலையில்தான் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு பள்ளியின் தலைமை ஆசிரியை லசி போஸ்கோ மற்றும் எல்கேஜி ஆசிரியை போர்ஷியா ஆகியோர் சிறுமியிடம் தகாதமுறையில் நடந்து கொண்டனர். இந்த அக்கிரமத்தைச் செய்த இருவரும், சிறுமியை மிரட்டியும் வைத்திருந்தனர். நடந்ததை யாரிடமாவது கூறினால் பாம்பு அடைக்கப்பட்ட இருட்டு அறையில் வைத்து உன்னைப் பூட்டி விடுவோம் என இவர்கள் மிரட்டியுள்ளனராம்.

ஆனால் ஆசிரியைகளின் அத்துமீறல் அதிகரித்துக் கொண்டே போன நிலையில் தனது மழலை மாறாத குரலில் பெற்றோரிடம் அதைக் கூறியபோது சுரேஷ் தம்பதியினர் அதிர்ச்சியில் நிலை குலைந்து போய் விட்டனர். அக்கம்பக்கத்தினருக்குத் தகவல் தெரிந்து அவர்கள் இரு ஆசிரியைகளையும் வீடு புகுந்து தாக்கினர். இதில் போர்ஷியா படுகாயமடைந்தார். அதன் பின்னர் இருவரும் தலைமறைவாகி விட்டனர். இவர்களைக் கைது செய்யாமல் போலீஸார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில்தான் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தை அடைந்தது. அங்கு காவல்துறைக்குக் கடும் கண்டனம் தெரிவித்தனர் நீதிபதிகள்.

இதையடுத்து சுதாரித்த போலீஸார் லசி போஸ்கோவைக் கைது செய்தனர். கேரளாவைச் சேர்ந்தவரான போர்ஷியா தனது ஊருக்கு ஓடி விட்டார். முன்ஜாமீனும் வாங்கி விட்டார். அதேபோல லசி போஸ்கோவும் ஜாமீனில் வெளியே வந்து விட்டார். லசி கடலூர் கோர்ட்டிலும், போர்ஷியா கள்ளக்குறிச்சி கோர்ட்டிலும் தினசரி கையெழுத்திட்டு வருகின்றனர்.

இந்த இரு ஆசிரியைகளும் செய்த செயல்களை சிறுமி ஷாலினி தனது தந்தையிடம் கூற அதை அவர் வீடியோவில் பதிவு செய்து வைத்துள்ளார். அதைப் பார்க்கும் யாருக்கும், அந்தக் குழந்தை கூறியதை கேட்கும் யாருக்குமே இதயம் அடைத்துப் போய் விடும். அதில் கூறப்பட்டுள்ள செய்கைகளை அச்சில் ஏற்ற முடியாது. அந்த அளவுக்கு இரு ஆசிரியைகளும் மிகவும் அநாகரீகமாக அசிங்கமாக நடந்து கொண்டுள்ளனர்.

மேலும் அவர்களின் செய்கையால் குழந்தை ஷாலினி மனதளவில் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளாள். அதிலும் பாம்பு அடைக்கப்பட்ட இருட்டு அறை என்று ஆசிரியைகள் கூறியது அவளது மனதிலிருந்து இன்னும் விலகவில்லையாம். இதனால் பள்ளியிலிருந்து ஷாலினியை நிறுத்தி விட்டனர் சுரேஷ் தம்பதியினர்.

அதற்குப் பதிலாக தனது மகளுக்கு வீட்டிலேயே சிடிக்களைப் போட்டு பாடம் சொல்லிக் கொடுத்து வருகிறார் சுரேஷின் மனைவி. மேலும் குழந்தையை சரளமாக, இயல்பு நிலைக்குக் கொண்டு சுரேஷும், அவரது மனைவியும் தீவிரமாக முயன்று வருகின்றனராம். அடுத்த ஆண்டு வேறு பள்ளியில் ஷாலினியைச் சேர்க்கவுள்ளார் சுரேஷ்.

இந்தக் கொடூரச் செயலை செய்த இரு ஆசிரியைகளும் திருமணமானவர்கள், குழந்தைகளும் உள்ளனர். ஆனால் சிறுமி ஷாலினியிடம் அவர்கள் நடந்து கொண்ட விதம் கள்ளக்குறிச்சி மக்களிடையே பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. சிபிசிஐடி விசாரணைக்கு இந்த வழக்கு தற்போது போயுள்ளது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி இந்த இரு ஆசிரியைகளால் பாதிக்கப்பட்டோர் குறித்த முழு விவரம், ஆசிரியைகளின் பின்னணி, குறிப்பாக போர்ஷியாவின் பின்னணி உள்ளிட்டவை குறித்த உண்மைகளை வெளிக் கொணர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

திருவெறும்பூர் பேரூராட்சியை திருச்சி மாநகராட்சியுடன் இணைத்தது செல்லும்-உயர்நீதிமன்றம்!


திருவெறும்பூர் பேரூராட்சியை, திருச்சி மாநகராட்சியுடன் இணைத்தது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீது இந்த தீர்ப்பை பிறப்பித்தது உயர்நீதிமன்ற பெஞ்ச். முன்னதாக திருவெறும்பூரை சேர்ந்த பாலசந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், திருவெறும்பூர் பேரூராட்சியி்ல் மட்டும் 17,000 மக்கள் உள்ளனர்.

இங்கு புகழ் பெற்ற எறும்பீஸ்வரர் கோயில், பல்வேறு தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் உள்ளன. கடந்த 6.9.2010 அன்று திருச்சி மாநகராட்சியுடன் திருவெறும்பூர் பேரூராட்சி மற்றும் பாப்பாகுறிச்சி, எல்லக்குடி, ஆலத்தூர் ஊராட்சிகளை இணைத்து எல்லையை விரிவுபடுத்துவது என்று திருச்சி மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றியது.

இதன் அடிப்படையில் திருவெறும்பூர் பேரூராட்சி, ஊராட்சிகளின் கருத்துக்களை தெரிவிக்கும்படி திருச்சி மாநகராட்சி கோரிக்கை விடுத்தது. ஆனால் இந்த இணைப்புக்கு திருவெறும்பூர் பேரூராட்சியும், 4 ஊராட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றின. இதை கருத்தில் கொள்ளாமல் தமிழக அரசு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் 28.9.2010, 15.10.2010, 3.1.2011 ஆகிய தேதிகளில் அரசாணை வெளியிட்டார்.

இந்த அரசாணையானது தமிழ்நாடு பஞ்சாயத்து சட்ட விதிகளுக்கு எதிரான முறையாகும். மற்றும் திருச்சி மாநாகராட்சி சட்டத்திற்கும் எதிரானது. ஏனெனில் இந்த அரசாணை குறித்தும், இணைப்பு குறித்தும் எந்த பத்திரிகைகளிலும் விளம்பர அறிவிப்பு வெளியிடப்படவில்லை. பொதுமக்களிடமும் கருத்து கேட்கப்படவில்லை.

இந்த இணைப்பை குறித்து திருவெறும்பூர் பேரூராட்சி மற்றும் ஊராட்சிகள் நிறைவேற்றிய தீர்மானமும் கருத்தில் கொள்ளவில்லை. ஆகையால் இது தொடர்பான அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று அவர் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்தார். இணைப்பையும் செல்லாது என்று அறிவித்தார்.

இதையடுத்து தமிழக அரசின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதை இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இன்று விசாரித்தது. விசாரணையின் இறுதியில் அரசின் மேல் முறையீட்டை ஏற்று தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். திருவெறும்பூரை திருச்சி மாநகராட்சியுடன் இணைத்தது செல்லும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதே நாள்...


  • உலக மொழிபெயர்ப்பாளர்கள் தினம்
  •  போட்ஸ்வானா விடுதலை தினம்(1966)
  •  தமிழ் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டது(2003)
  •  உலகின் முதலாவது நீர்மின் திறன் அமெரிக்காவின் விஸ்கென்சின் மாகாணத்தில் அமைக்கப்பட்டது(1882)
  • 28 September, 2011

    பூமியில் மோதி விழுந்த அமெரிக்க செயற்கைகோள் எங்கே? தேடும் பணி தீவிரம்!


    காற்று மண்டலத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்கா 6 டன் எடையுள்ள ஒரு செயற்கை கோளை விண்ணுக்கு அனுப்பியது. கடந்த 1995-ம் ஆண்டு அது செயல் இழந்தது. அதைத்தொடர்ந்து அந்த செயற்கை கோள்படிப்படியாக பூமியை நோக்கி நகர்ந்து வந்தது. பின்னர் புவிஈர்ப்பு சக்தி காரணமாக கடந்த சனிக்கிழமை வட அமெரிக்காவில் வடகிழக்கு பகுதியில் விழுந்தது.  
     
    தொடக்கத்தில் அந்த செயற்கை கோளின் உடைந்து சிதறிய துண்டுகள் கனடாவில் விழுந்ததாக கூறப்பட்டது. ஆனால் அந்த சிதறல்கள் அங்கு விழவில்லை. எனவே, “நாசா” விஞ்ஞானிகள் உடைந்த செயற்கை கோள் சிதறல் விழுந்த இடத்தை தற்போது கணித்துள்ளனர். அதன்படி அவை அமெரிக்க கண்டத்தில் பசிபிக் கடல் பகுதியில் விழுந்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். 
     
    உடைந்து சிதறிய சில துண்டுகள் கிறிஸ்துமஸ் தீவில் இருந்து தென் மேற்கில் 420 கி.மீட்டர் தூரத்தில் விழுந்திருக்கலாம். மேலும் உடைந்த 25 துண்டுகள் அதில் இருந்து 800 கி.மீட்டர் சுற்றளவில் சிதறி கிடக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். செயற்கைகோளின் உடைந்த உதிரி பாகங்கள் எங்கு விழுந்தது என சரியாக கண்டுபிடிக்க முடியாமல் நாசா விஞ்ஞானிகள் திணறி வருகின்றனர். எனவே அவற்றை தேடும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். 

    இதே நாள்...


  • அர்ஜெண்டினா, கண்டுபிடிப்பாளர்கள் தினம்
  •  உலகின் முதலாவது மின்சார திராம் வண்டி இங்கிலாந்தில் பிளாக்பூல் நகரில் சேவையை ஆரம்பித்தது(1885)
  •  அரபுக் கூட்டமைப்பில் ஓமன் இணைந்தது (1971)
  •  தமிழக கவிஞர் அரங்க.சீனிவாசன் பிறந்த தினம்(1920)
  • பாதுகாப்பற்ற செக்ஸ் உறவு அதிகரித்து வருகிறது: உலக கருத்தடை ஆய்வு !


    உலகளவில் அதிகளவிலான இளம் வயதினர் பாதுகாப்பற்ற செக்ஸ் உறவுக் கொள்வதாக, உலக நாடுகள் பலவற்றில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பு மூலம் தெரிகிறது. நேற்று உலக கருத்தடை நாள் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக உலகளவில் பாலியல் உறவு மற்றும் கருத்தடை முறைகள் குறித்த கேட்கப்பட்ட கேள்விகளின் மூலம் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் மூலம் உலகளவில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன. உலகில் பாதுகாப்பற்ற முறையில் பலரிடம் செக்ஸ் உறவு கொள்ளும் முறை அதிகரித்து வருவது தெரிந்துள்ளது.

    புதிய நபருடன் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு கொள்ளும் இளவயதினரின் எண்ணிக்கை, கடந்த 3 ஆண்டுகளில் 20 சதவீதமும், பிரன்சில் 2 மடங்கும், அமெரிக்காவில் 40 சதவீதமும் அதிகரித்துள்ளது. வளர்ந்த நாடுகளில் உள்ள இளம்வயதினருக்கு கூட தகுந்த கருத்தடை மற்று பாதுகாப்பான உடலுறவு குறித்த தகுந்த அறிவு இல்லை என தெரிகிறது.

    ஐரோப்பிய நாடுகளில் 50 சதவீதம் இளம் வயதினர் பள்ளிகளின் மூலம் செக்ஸ் கல்வியை பெற்றுள்ளனர். தென் அமெரிக்கா, அமெரிக்கா, மற்றும் ஆசியா பசிவிக் பகுதிகளில் 30 சதவீதம் மக்கள் செக்ஸ் கல்வியை பெற்றுள்ளனர். ஆனால் அவர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் பல நபர்களுடன் பாதுகாப்பற்ற செக்ஸ் உறவு கொள்ளும் பழக்கம் கொண்டுள்ளனர்.

    இந்த ஆய்வில் சிலி, போலாந்து, சீனா உள்ளிட்ட 26 நாடுகளை சேர்ந்த 6,000க்கும் மேற்பட்ட மக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ஆய்வில் உலகிலேயே தாய்லாந்தில் 62 சதவீதம் மக்களும், அதற்கு அடுத்தப்படியாக சீனாவில் 58 சதவீதமும் பாதுகாப்பற்ற செக்ஸ் உறவை விரும்புவதாக தெரிவித்துள்ளனர். இந்தியாவில் 32 சதவீதம் இளம் வயதினர் பாதுகாப்பற்ற செக்ஸ் உறவை விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து ஆய்வில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது, உலகளவில் பாதுகாப்பற்ற உறவுகளால் இளம் வயதினர் இடையே தேவையற்ற கர்ப்பமடைவது அதிகரித்து வருகிறது. கருத்தடை முறைகளை குறித்து கேட்பதற்கு சில நாடுகளில் மக்கள் வெட்கப்படுவதால், அது குறித்த சரியான அறிவு இல்லை.

    எகிப்தில் உள்ள 30 சதவீதத்திற்கும் மேற்பட்ட இளம் வயதினர் உறவு கொண்ட பின்பு, குளித்தால் கருத்தரிக்க மாட்டார்கள் என எண்ணுகின்றனர். இந்தியா மற்றும் தாய்லாந்தில் உள்ள 35 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் மாதவிடாய் காலத்தில் உறவு கொள்வது மிகவும் பாதுகாப்பானது என கருதுகின்றனர். இதில் உலகளவில் பொதுவாக 15 சதவீதம் பேருக்கு கருத்தடுப்பு முறைகளில் விருப்பமே இல்லை என தெரிவித்துள்ளனர்.

    கனவு காண்பதால் மூளை சுறுசுறுப்படையும்!


    ஏதாவது தவறு செய்துவிட்டாலோ, அல்லது நினைவில்லாமல் மறந்துவிட்டாலோ பிறரிடம் இருந்து முதலில் வரும் கேள்வி என்ன புத்தி மழுங்கிப் போச்சா என்பதுதான். அந்தளவிற்கு மனிதர்களுக்கு தலைமைச் செயலகமான மூளையின் பங்கு முக்கியமானது. மனிதர்களுக்கு வயசாக வயசாக, ஞாபக மறதி, தோல் சுருக்கம், நடை தளர்ச்சி, மூட்டுவலி இப்படி எத்தனையோ பிரச்சினைகள் வரத்தொடங்கும். அவற்றை தவிர்க்க முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் முதுமையினால் ஏற்படும் நோய்களை ஏற்றுக்கொள்ளும் மனமானது வயசு ஏற ஏற அறிவும் கூட வளறவேண்டும் என்றுதான் நினைக்கிறது.

    எனவே வயது முதிர்ச்சியுடன் சேர்த்து, அறிவு முதிர்ச்சியும் இருக்க வேண்டும் என்பதற்காக விஞ்ஞானப்பூர்வமான ஆதாரங்களோட, பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில முத்தான 10 வழிகளை சமீபத்துல ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அவைகளை உங்களுக்காகக் கொடுத்துள்ளோம்.

    ஒரு நாளைக்கு 4 காஃபி: காலையில் எழுந்த உடன் ஆற அமர ருசித்து காஃபி குடியுங்கள். ஏனெனில் காஃபியில் உள்ள கெஃபீன் என்னும் வேதிப்பொருள், மூளையை பாதுகாக்கிறது. நாளொன்றுக்கு நான்கு கப் காஃபி குடித்தால் அல்ஷெய்மர்ஸ் என்ற நினைவாற்றலை பாதிக்கும் நோய் வராமல் தடுக்கப்படுகிறதாம். இந்த மருத்துவத்தன்மையானது, காஃபியில இருக்குற கெஃபீன் லேர்ந்து கிடைக்கிறதா ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் என்னும் வேதிப்பொருள்லேர்ந்து கிடைக்கிறதா என்பது பற்றியும் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.மூளையைத் தூண்டுங்கள்: எவ்வளவுக்கு எவ்வளவு உங்க மூளையை கசக்கி ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்ள முயற்சி செய்கிறீர்களோ, அவ்வளவும் உங்க முதுமைக் காலத்துல அறிவு முதிர்ச்சிக்கு வித்திடுமாம்!. ஒரு புது கணக்குக்கு விடை கண்டுபிடிக்கிறதுல மூளைக்கு கிடைக்குற பலனைவிட, சிக்கல் விளையாட்டுல எல்லா பகுதியையும் ஒன்னா சேர்க்குறதுல கிடைக்குற பலன் ரொம்பக் குறைவாம். குறுக்கெழுத்துப் போட்டியோ அல்லது அதற்கு இணையான மூளைப் பயிற்ச்சி விளையாட்டுகளோ, இவை எல்லாம் மூளையை பெரிதாக மேம்படுத்துகின்றன என்பதை திட்டவட்டமான ஆதாரங்களுடன் வரையறுக்கும் ஆய்வுகள் இதுவரை இல்லை!.மன உளைச்சலை குறைங்க: மன உளைச்சலினால் நினைவாற்றல் சக்திக்கு அடிப்படையான மூளையின் ஹிப்போகேம்பஸ் மற்றும் இன்னும் சில பகுதிகளில் விஷத்தன்மையுள்ள பல ரசாயனப் பொருள்கள் கொட்டப்படுகிறதாம். யோகா, நண்பர்களுடன் பேசுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டால், மன உளைச்சல் குறைந்து, நினைவாற்றல் அதிகரிக்கிறது என்கிறது ஆய்வுகனவு காணுங்கள்! கனவு காண்பதால் மூளை வளர்ச்சியடையும் என்ற அதிசயிக்கத்தக்க உண்மை கண்டறியப்பட்டுள்ளது. கண்களை திறந்து கொண்டே பகல் கனவு காண்பதால் எந்த பிரயோசனமும் இல்லை. சரியான நேரத்தை ஒதுக்கி, உறங்கும்போது, வரும் கனவுகள் ஒருவரின் நினைவாற்றல் மீதான மேற்பார்வை செய்யும் மூளை, தேவையில்லாதவற்றை அழித்து, முக்கியமானவற்றை செப்பனிட்டு பாதுகாக்கிறதாம். ஆனால் சரியான தூக்கமின்மையால் நம் நரம்புத் தொடர்புகளின் (synapses) மீது, ஒரு வித புரதங்கள் தேங்கி, சிந்திக்கும் மற்றும் கல்வி கற்கும் திறன் குறைந்து போகிறதாம். முக்கியமா, வருடக்கணக்கில் சரியான தூக்கமில்லாதவர்களுக்கு, அவர்களின் முதுமையில் அறிவுத்திறன் பெரிதும் குறைந்துவிட வாய்ப்புகள் இருக்கிறதாம்!சுறுசுறுப்பான செயல்பாடு: நாளொன்றுக்கு 30 நிமிடங்கள் சுறுசுறுப்பாக ஏதாவது வேலை செய்யவேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள். இது மூளை ஆரோக்கியத்தை மிகவும் மேம்படுத்துகிறதாம். நடப்பது, தோட்ட வேலை செய்வது, ஓடுவது இப்படி எதுவாக இருந்தாலும் அரைமணி நேரம் தொடர்ந்து செய்தால் மூளை வளர்ச்சி அதிகரிக்குமாம். நோயின்றி வாழ்வோம்: வருமுன் காத்துக்கொள்ளக் கூடிய நோய்களான, நீரிழிவு நோய் (Type II diabetes), உடல்பருமன், ரத்தக் கொதிப்பு போன்றவை கூட ஒருவரின் மூளையை பாதிக்கின்றனவாம்! உடலளவிலான எல்லா உபாதைகளுமே, மூளையின் கற்கும் திறனையும், நினைவுத்திறனையும் பெரிதும் பாதிக்கின்றனவாம். எனவே உடலை பேணுவதன் மூலம் மூளை வளர்ச்சியை அதிகரிக்கலாம்.உணவுக் கட்டுப்பாடு: அதிகமாக உண்ணுவதன் மூலம் மூளை சோர்வடைந்து நினைவாற்றல் பாதிக்கிறதாம். அதேசமயம், உணவுக் கட்டுப்பாடு என்ற பெயரில் மிகவும் குறைவாக உட்கொண்டாலும் மூளை பாதிக்கப்படுகிறதாம். அவர்கள் கவனச்சிதறல், குழப்பம் மற்றும் நியாபகச் சக்தி குறைவு போன்ற உபாதைகளால் பாதிக்கப்படுகிறார்களாம். எனவே அதிக நார்ச்சத்துள்ள மிதமான அளவில் கொழுப்பும் புரதமும் உள்ள உணவை உட்கொள்வதன் மூலம் செரிமானச் செயல்பாடானது சீராக நடைபெற்று உடல் பாகங்களின் ஆரோக்கியத்தை நீண்டகாலம் பாதுகாத்து சரியான நிலையில் வைத்திருக்க உதவுகிறது.மீன் சாப்பிடுங்க: மூளைவளர்ச்சியை அதிகரிப்பதில் ஒமேகா 3 எனப்படும் கொழுப்பிற்கு முக்கிய பங்குண்டு. இது மீன்களில் அதிகம் காணப்படுகிறது. ஒமேகா 3 கொழுப்பு நிறைந்த விதைகளையும் அதிகம் உண்ணலாம். மீன் எண்ணெய் மாத்திரைகள் தேவையில்லை.மாத்திரைகளை தவிருங்கள்: வைட்டமின், தாது மாத்திரைகள் அப்புறம் சில நினைவாற்றல் மாத்திரைகள் எல்லாம் மூளைவளர்ச்சியை மேம்படுத்துவதாக சொல்லப்படுகிறது. இவற்றை உட்கொள்வதன் மூலம் ரத்தக் கொதிப்பு, செரிமானக் கோளாறு, மலட்டுத்தன்மை பிரச்சினைகள், மன உளைச்சல் போன்ற நோய்களும் தோன்றுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. என்ன 'கத்திக் கத்தி' டென்ஷனாவைத விட்டு விட்டு 'புத்தியை' தீட்ட சுறுசுறுப்பாக கிளம்பிவிட்டீர்களா?

    கலரை சொல்லுங்கள் குணத்தைச் சொல்கிறோம்!


    கலரை சொல்லுங்கள் குணத்தைச் சொல்கிறோம் என்பார்கள். ஆம். ஒருவருக்குப் பிடித்த கலரை வைத்து அவருடைய குணத்தைக் கண்டுபிடிக்கலாம். கலர்புல்லான ஜோதிடத்தில் நம்பிக்கையுள்ளவர்கள் இதனை படித்து சுய பரிசோதனை செய்து கொள்ளலாம். வெண்மை: அமைதிக்கும் சமாதானத்திற்கும் வெண் நிறத்தை உதாரணமாக கூறுவார்கள். வெண்மை விரும்பிகள் சரியான இளமைவாதிகள். எங்கும், எதிலும் முழுமை வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். எந்த செயலிலும் இறங்குவதற்கு முன்பாக ஆழம் பார்த்து கால்விடுவீர்கள். அதனால் சீக்கிரம் ஏமாறமாட்டீர்கள். பிடிக்கும் என்பதற்காக அடிக்கடி வெள்ளை ஆடை அணியவேண்டாம். ஊரெல்லாம் மழை பெய்து ஒரே சேரும், சகதியுமாக இருக்கிறது!!.

    சிவப்பு: ரொம்பவே ஆக்டிவ் ஆசாமிகள் இவர்கள். நத்தை கூட மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் நகரவேண்டும் என்று ஆசைப்படுவீர்கள். இந்த கலர் பிடித்த ஆண்களுக்கு ஒரே மாதிரியான வாழ்க்கை என்றால் கசப்பு. அதிக மன வலிமை இருக்கும். இவர்களின் பலமும், பலவீனமும் அதுதான்.

    பிங்க்: சிவப்பின் மென்மைக் குணமே பிங்க். சரியான சுயநலச் சுனாமிகள். தன்னை யாராவது கவனித்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். இதற்காக பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்டு நடிப்பார்கள், ரொம்ப ஜாக்கிரதை. மெரூன்: வாழ்க்கையில் அடிபட்டு படிப்படியாக ஏறிவந்தவர்களுக்கு மெருன் கலர் மிகவும் பிடிக்கும். தனக்கு உதவி கிடைக்காததால் சுற்றி இருப்பவர்களுக்கு உதவி செய்வார்கள். மெரூன் என்றால் மெச்சூரிட்டி என்று அர்த்தம்.

    ஆரஞ்சு: இந்த நிறத்தை விரும்புபவர்கள் சுகவாசிகள். எந்த நேரமும் சந்தோஷமாக இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள். ஆனால் கூட்டணி கவர்ன்மென்ட் மாதிரி எப்போதும் நிலை இல்லாமல் அலைவீர்கள்.மஞ்சள்: மங்களகரமான மஞ்சள் வர்ணம் பிடித்தவர்களுக்கு புத்திசாலித்தனமும் கற்பனை வளமும் அதிகம் இருக்கும். நகைச்சுவை வளம் கூடுதலாகவே இருக்கும். இதனால் யாரையும் எளிதில் சிரிக்க வைத்துவிடுவார்கள். எங்கும் எப்பொழுதும் முழுச்சுதந்திரமாக இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் இவர்கள்.

    பச்சை: பசுமையை குறிக்கும் பச்சை நிறத்தை விரும்புபவர்கள் மென்மை ப்ளஸ் நேர்மைவாசிகள். உங்களைச்சுற்றி எப்பொழுதும் பத்து பேர் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அமைதியாக இருப்பதையே விரும்புவார்கள். அன்பே இவர்களின் ஆயுதம். இதனை பயன்படுத்தி சுற்றியுள்ளவர்கள் ஏமாற்ற முயற்சி செய்வார்கள் எனவே விழிப்போடு இருப்பது அவசியம்.கறுப்பு: கிவ் ரெஸ்பெக்ட், ஹேவ் ரெஸ்பெக்ட் பார்ட்டிகள். மரியாதை என்பது மரணம் மாதிரி. நீங்கள் விரும்பாவிட்டாலும் உங்களை தேடி வரும். ஈஸியாக மற்றவர்களை இம்ப்ஸ்ரெஸ் செய்துவிடுவீர்கள்.

    வயலட் நிறம்: கொஞ்சம் கலாச்சாரக் காவலர் நீங்கள். புதுமை பிடிக்காது. கட்டம் போட்ட பேண்ட் போட்டுள்ளவர்களைப் பார்த்தால் அலறுவீர்கள். உள்ளுவது உயர்வுள்ளல் ஆனால், வேலை என்று வந்துவிட்டால் குறட்டை விடுவீர்கள்.
    வாழ்க்கை முழுக்க ஒரே கலர் பிடிக்காதே… மாறிக்கொண்டே இருக்கிறது என்கிறீர்களா? கலருக்குத் தகுந்த மாதிரி உங்கள் கேரக்டரும் அந்தந்த நேரம் மாறியிருக்கும்!

    4 வயது மாணவி பாலியல் பலாத்கார வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உயர் நீதிமன்றம்!


    4 வயது பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்துமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  விழுப்புரம் மாவட்டம் சவுந்தரவல்லிபாளையத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது, 

    கள்ளக்குறிச்சி போலீசில் ரமேஷ்-ராணி தம்பதியினர் கடந்த 3.8.11 அன்று புகார் ஒன்றை கொடுத்தனர். அவர்களது 4 வயது மகள் கவிதாவை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஏ.கே.டி. மெட்ரிக் பள்ளியின் ஆசிரியைகள் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளனர். அப்பள்ளி தலைமை ஆசிரியை லெசி பாஸ்கோ, வகுப்பு ஆசிரியை போசியா ஆகிய இருவரும் பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் பள்ளி தலைமை ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் வகுப்பு ஆசிரியை கைது செய்யப்படவில்லை. இது குறித்து ஆர்ப்பாட்டம் நடத்த கள்ளக்குறிச்சி போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். எனவே, இச்சம்பவம் குறித்து போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும். மேலும் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.

    இந்த மனு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம். ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் இந்த வழக்கில் தொடர்புடைய 6 பேரிடம் விசாரணை நடத்தி ஒருவரை கைது செய்ததாகவும், இன்னொருவரை கைது செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

    இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது, 4 வயது சிறுமியை பலாத்காரம் செய்திருப்பது கொடுமையானது, காட்டுமிராண்டித்தனமானது. இந்த வழக்கில் போலீசார் ஒழுங்காக நடவடிக்கை எடுக்கவில்லை. அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் கைது செய்யப்படாதவரின் பெயரைக் கூட குறிப்பிடவில்லை. ஆகையால் இதில் தொடர்புடைய குற்றவாளையை 24 மணி நேரத்திற்குள் கைது செய்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேணடும். அடுத்த விசாரணையின்போது விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு, கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அதன் பிறகு இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க வேண்டும் என்றும், பெண் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான குழு விசாரணை நடத்தி இன்னும் 4 வார காலத்திற்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

    பள்ளிகளில் இனி மதிப்பெண்களுக்கு பதில் கிரேடு முறை!


    2012-13ம் கல்வியாண்டு முதல் 1-8 வகுப்புகளுக்கு கிரேடு முறை அமல்படுத்தப்படுகிறது. 2013-2014ம் கல்வியாண்டில் 9 மற்றும் 10ம் வகுப்புகளுக்கும் கிரேடு முறை அறிமுகப்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. பள்ளி்க் குழந்தைகள் தேவைக்கு அதிகமாக புத்தகச் சுமையை தூக்குவதால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளை குறைக்கும் நோக்கத்துடன், வரும் கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் முப்பருவ முறை (Trimester pattern) அறிமுகப்படுத்தப்படும். முழுக் கல்வியாண்டிற்குரிய பாடப் புத்தகங்கள் மூன்று பருவங்களுக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பருவ முடிவிலும் தொடர் மற்றும் கூட்டு மதிப்பீட்டுடன் கூடிய தேர்வுகள் நடத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார்.

    இந்நிலையில் மாணவர்கள் மொட்டைப் மணப்பாடம் செய்து மதிப்பெண் வாங்குவதற்கு பதிலாக அவர்களின் சிந்திக்கும் திறனை ஊக்குவிக்கும் வகையில் கிரேடு முறையை அரசு அறிமுகப்படுத்தவிருக்கிறது.இது குறித்து தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் டி. சபீதா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது, 

    பள்ளி மாணவர்கள் குருட்டு மனப்பாடம் செய்து தேர்வு எழுதி மதிப்பெண் பெறும் முறையை மாற்றி அவர்களின் சிந்திக்கும் திறனை ஊக்குவிக்கும் வகையில் தொடர் மற்றும் ஒட்டுமொத்த மதிப்பீட்டு முறையை (கிரேடு சிஸ்டம்) கொண்டு வருவது தொடர்பாக தமிழக அரசு, நிபுணர் குழுவை அமைத்தது. அந்த நிபுணர் குழு அளித்துள்ள பரிந்துரை விவரம் வருமாறு:-

    தற்போதைய தேர்வுமுறை மாணவர்களின் நினைவாற்றலை மையப்படுத்தியே அமைந்துள்ளது. மேலும், 10-ம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வு வினாக்களும் மாணவர்கள் எளிதாக கண்டறியும் வகையிலேயே உள்ளன. இதன் காரணமாக, மாணவர்களால் பாடத்தை தாண்டி வெளியே படிக்க முடியவில்லை.

    அரசு பொதுத் தேர்வுகளாலும் மாணவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுகிறது. அது மட்டுமல்லாமல், தேர்வில் தோல்வி காரணமாக தவறான முடிவு எடுப்பதற்கும் இட்டுச் செல்கிறது. இதைத் தவிர்க்க தொடர் மற்றும் ஒட்டுமொத்த மதிப்பீடு முறை கொண்டுவர வேண்டியது அவசியம் ஆகும். சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 10-ம் வகுப்பில் ஏற்கனவே இந்த முறை அமலில் உள்ளது. மேலும், கேரளா, கர்நாடகம் போன்ற மாநிலங்களிலும் இந்த முறை ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது.

    இந்த முறையின்படி, ஒவ்வொரு கல்வி ஆண்டும் 3 பருவங்களாகப் பிரிக்கப்பட வேண்டும். ஜூன் முதல் செப்டம்பர் வரை முதல் பருவம், அக்டோபர் முதல் டிசம்பர் வரை 2-ம் பருவம், ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 3-ம் பருவம். இந்த பருவங்களில் உடனடி மதிப்பீடு, பருவ இறுதி மதிப்பீடு என இரண்டு வகையான மதிப்பீடுகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

    உடனடி மதிப்பீட்டுக்கு 40 மதிப்பெண்களும், பருவ இறுதி மதிப்பீட்டுக்கு 60 மதிப்பெண்களும் வழங்கப்பட வேண்டும். கற்பனைத் திறனை வளர்க்கும் நடவடிக்கைகளான விளையாட்டு, நாடகம், பாடல்கள் போன்றவை உடனடி மதிப்பீட்டிலும், தேர்வுகள் பருவ இறுதி மதிப்பீட்டிலும் இடம்பெற வேண்டும். இதில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்ணுக்கு ஏற்ப கிரேடு வழங்கப்பட வேண்டும்.

    55 முதல் 60 மார்க் வரை - ஏ 1 கிரேடு (பாயிண்ட் 10)

    49 முதல் 54 வரை - ஏ 2 கிரேடு (பாயிண்ட் 9)

    43 முதல் 48 வரை - பி 1 கிரேடு (பாயிண்ட் 8)

    37 முதல் 42 வரை - பி 2 கிரேடு (பாயிண்ட் 7)

    31 முதல் 36 வரை - சி 1 கிரேடு (பாயிண்ட் 6)

    25 முதல் 30 வரை - சி 2 கிரேடு (பாயிண்ட் 5)

    19 முதல் 24 வரை - டி கிரேடு (பாயிண்ட் 4)

    13 முதல் 18 வரை - இ 1 கிரேடு (பாயிண்ட் இல்லை)

    12 மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பெண் - இ 2 கிரேடு (பாயிண்ட் இல்லை)

    மூன்று பருவங்களின் முடிவில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் மற்றும் கிரேடு சராசரி அடிப்படையில் ஆண்டு இறுதியில் கிரேடு வழங்கப்பட வேண்டும். ஒரு பருவத்தில் எடுக்கப்படும் பாடங்கள் அடுத்த பருவத்திற்கு வராது. இதனால், ஆண்டு தேர்வுக்கான முக்கியத்துவம் குறையும். இதுபோல, 10 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகளையும் மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வுகளில் கல்லூரிகளில் இருப்பதைப் போன்று செமஸ்டர் முறையையே அறிமுகப்படுத்தலாம்.

    நிபுணர் குழு அளித்த மேற்கண்ட பரிந்துரைகளை ஆராய்ந்த அரசு மதிப்பெண்ணுக்குப் பதிலாக கிரேடு வழங்கும் முறையை நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி, வரும் கல்வி ஆண்டு முதல் (2012-13) ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையும், அடுத்த கல்வி ஆண்டில் இருந்து (2013-14) 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கும் கிரேடு முறையை கொண்டுவர வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. வரும் கல்வி ஆண்டு முதல் கல்லூரிகளில் இருப்பதைப் போல அனைத்து பள்ளிகளிலும் முப்பருவ தேர்வு முறை (டிரெமஸ்டர் சிஸ்டம்) நடைமுறைப்படுத்தப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நள்ளிரவில் ஆடையில்லாமல் நிர்வாணமாக ஓடிய பெண்!


    சென்னை பல்லாவரம் மார்க்கெட் பகுதியில் நள்ளிரவில் இளம்பெண் ஒருவர் பொட்டுத் துணி கூட இல்லாமல் திடீரென நிர்வாணமாக ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பேய் என்று கூறி மக்கள் பீதியடைந்தனர்.  நேற்று பல்லாவரம் மார்க்கெட் பகுதியில் ஒரு இளம் பெண் உடைகளின்றி, தலைவிரி கோலமாக ஓடி வந்து கொண்டிருந்தார். இதைப் பார்த்து அந்தப் பகுதியில் அப்போது ரோந்து வந்து கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் கோவிந்த் உடனடியாக மகளிர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார்.

    மகளிர் போலீஸார் போலீஸ் ஜீப்பில் விரைந்து வந்து அந்தப் பெண்ணைப் பிடித்து ஆடைகளை அணிவித்து பல்லாவரம் காவல் நிலையத்திற்குக் கூட்டிச் சென்றனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் கூறுகையில், எனது சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம், தென்கல்பாக்கம் கிராமம் ஆகும். கடந்த 6 வருடமாக அதே பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரும், நானும் தீவிரமாக காதலித்து வந்தோம்.

    10 மாதத்திற்கு முன்பு என்னை ஏமாற்றி விட்டு வேறொரு பெண்ணை ராமச்சந்திரன் திருமணம் செய்து கொண்டார். எனவே செய்யாறு போலீசில் இதுபற்றி அப்போது புகார் செய்தேன். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நான் பெரும் மன உளைச்சலில் இருந்து வந்தேன். இதனால் எனது பெற்றோர் மன மாற்றத்துக்காக பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரில் உள்ள எனது மூத்த சகோதரி வீட்டிற்கு என்னை அனுப்பி வைத்தனர்.

    ராமச்சந்திரன் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க என்ன செய்யலாம் என்று யோசித்தேன். வித்தியாசமாக எதையாவது செய்தால் போலீசார் கைது செய்து நம்மை விசாரிப்பார்கள். அப்போது நடந்ததை கூறி ராமச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்க செய்யலாம் என்று நினைத்தேன். இதற்காக நள்ளிரவு நிர்வாணமாக பொழிச்சலூரில் இருந்து பல்லாவரம் வரை நடந்து வந்தேன் என்றார் அவர். இதற்கிடையே, இந்தப் பெண் வந்த வழியெல்லாம் அவரைப் பார்த்த பொதுமக்கள் பேய் என நினைத்து ஓடி ஒளிந்ததும் தெரிய வந்துள்ளது. 
    அந்தப் பெண் சொல்வது உண்மையா அல்லது மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    பிரதமர் அனுப்பிய 'அக்னாலட்ஜ்மென்ட்' கடிதத்தை வைத்து ஸ்பெக்ட்ரம் மோசடியைச் செய்த ராசா!


    2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்த அனைத்தும் பிரதமருக்கும், ப.சிதம்பரத்திற்கும் தெரியும் என கோர்ட்டில் ஒவ்வொரு முறையும் கூறி வரும் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, பிரதமர் தனக்கு அனுப்பிய ஒரு ஒப்புகைக் கடிதத்தை வைத்து அனைவரையும் திசை திருப்பியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

    கடந்த 2007ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதினார் ராசா. அதில், பிரணாப் முகர்ஜியை தான் சந்தித்து மொபைல் லைசென்ஸ் குறித்த கொள்கை வகுப்பு குறித்து விவாதித்ததாக தெரிவித்துள்ளார். அப்போது பிரணாப் முகர்ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பான முடிவுகளைக் கையாளும் உயர் மட்ட அமைச்சர்கள் குழுவின் தலைவராக இருந்தார். பதிலுக்கு 2008ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் பதில் கடிதம் அனுப்பினார். அதில், உங்களது கடிதம் பெற்றேன் என்று கூறியுள்ளார் சிங்.

    இதைத் தொடர்ந்து 2008ம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி தொலைத் தொடர்புத்துறைக்கு ஒரு கடிதம் எழுதுகிறார் ராசா. அதில், பிரதமரின் 'அக்னாலட்ஜ்மென்ட்' கடிதத்தை மேற்கோள் காட்டி, லைசென்ஸ் தொடர்பான கொள்கை முடிவு எடுக்க பிரதமர் அனுமதித்துவிட்டதைப் போல சொல்லி, முடிவுகளை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அதாவது பிரதமருக்குத் தான் எழுதிய கடிதத்திற்கு பிரதமர் அனுப்பிய 'அக்னாலட்ஜ்மென்ட்' கடிதத்தை பதிலை, பிரதமரின் அனுமதி போல திரித்து தொலைத் தொடர்புத்துறையைத் திசை திருப்பியுள்ளார் ராசா.

    மேலும் 122 லைசென்ஸ்களை வினியோகிப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்புதான் தொலைத் தொடர்புக் கொள்கையையும் திருத்தியுள்ளனர். தொலைத் தொடர்பு ஆணையத்தின் ஒப்புதல் பெறாமலேயே இது நடந்துள்ளது.
    இதுகுறித்து விசாரித்த, நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலைமையிலான ஒரு நபர் கமிஷன், எந்தவித ஒப்புதலும் பெறாமல் தொலைத் தொடர்புக் கொள்கை திருத்தப்பட்டதாக தெளிவாகக் கூறியுள்ளது.

    முதலில் வருவோருக்கு முதலில் ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்களை வினியோகிப்பது என்றுதான் இருந்தது. ஆனால் இதை மாற்றிவிட்டார் ராசா. முதலில் வருவோருக்கு அல்லது முதலில் விண்ணப்பிப்போருக்கு என்று இல்லாமல், அனைத்து நிபந்தனைகளையும் யார் ஏற்கிறார்களோ அவர்களுக்கு என்று மாற்றி விட்டார் ராசா.

    2008ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி, ஸ்பெக்ட்ரம் உரிமம் கோரிய நிறுவனங்களுக்கு சில மணி நேர அவகாசம் மட்டுமே தரப்பட்டு காசோலைகள், விருப்பம் ஆவணம் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. ராசாவின் திட்டத்தை முன்கூட்டியே 'அறிந்த' சில நிறுவனங்கள் காசோலைகள் உள்ளிட்டவற்றுடன் தயாராக இருந்துள்ளன. அவற்றுக்கு உடனடியாக லைசென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களைச் சேர்ந்த சிலர்தான் தற்போது ராசாவுடன் சேர்ந்து திஹார் சிறையில் பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்களது கடிதம் வந்தது என்ற ஒரு வரி பிரதமரின் பதிலை வைத்து மிகப் பெரிய திசை திருப்புதலை செய்துள்ளார் ராசா என்பது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

    The Best Prostitute in the World..


    பிரா கழட்டிய சாதனையாளர்!


    சாதனைகள் என்பது மிகவும் இலகுவாக கிடைப்பதல்ல. கடும் முயற்சி செய்து எம்மை வருத்தி பெறுவது என்பது இயல்பு. ஆனால் இங்கு ஒருத்தர் நோகாமல் நொக்கு எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். என்ன என்கிறீர்களா? உலகில் அதிகபடியான பெண்களின் பிராக்களை கழற்றி சாதனை புரிந்துள்ளார். ஒரு நிமிட நேரத்தில் 44 பெண்களின் பிராக்களை கழற்றி கின்னஸ் சாதனை படைத்துள்ளார் இந்த அதிஸ்டகார மனிதன். இதற்கு முன்னர் 42 தடவைகள் பிராக்களை கழற்றி சாதனை ஏற்படுத்தப்பட்டிருந்தது. இப்பொழுதெல்லாம் சாதனைகள் என்பது நிர்வாணமாக குளிப்பதும், நிர்வாணமாக ஓடுவதும் ,படம் எடுப்பதும் ,பெண்கள் மார்புகனை பிடிப்பதும் தான் மேற்கொள்ளப்படுகிறது. இந்த உலம் எங்கு போய் முடியப்போகிறதோ கடவுளுக்குத்தான் தெரியும்… காலத்தின் கொடுமை இதெல்லாம் சாதனையாக ஏற்றுக்கொள்வது.

    கில்லாடிப் பெண்!


    நகைகளை திருடி பாவாடைக்குள் உள்ள இரகசிய பொக்கெட்டுக்களில் மறைத்து வைத்த பெண்ணொருவர் வசமாக மாட்டிக் கொண்டார். திருடிய தங்க நகைகளின் பெறுமதி 54000 ஸ்டேர்லிங் பவுண்கள். இவர் நகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் பெட்டியுடன் சேர்த்தே திருடி பாவடையில் இருந்த நீண்ட பொக்கெட்டுக்களில் மறைத்து வைத்துள்ளார். கண்காணிப்புக் கமரா காட்டிக் கொடுத்தமையால் Saina Sava என்ற குறித்த பெண் வசமாக மாட்டிக் கொண்டார்.
    குறித்த பெண் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு 16 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் ரோமானியா நாட்டைச் சேர்ந்தவராவார். திருடுவதிலும் திருடர்கள் நாளாந்தம் புது புது தொழிநுட்பங்களைக் கையாளுகிறார்கள். எச்சரிக்கையாக இருக்க வேண்டியது எல்லோருமே…

    RaOne Official Song


    27 September, 2011

    வாசலில் கோலமிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

    கோலமிடும் வீட்டில் மகாலெஷ்மி நிரந்தர வாசம் செய்கின்றாள். சூரிய உதயத்திற்கு முன் வாசலில் சாணம் தெளித்து கோலமிட வேண்டும். வீட்டில் இருந்து யாரேனும் வெளியே கிளம்பும் முன்பாக கோலமிட வேண்டும்.கோலத்தில் புள்ளி,கோடு போன்றவை போடும் போது சிறு தவறு ஏற்படும் போது காலினால் அழிக்க கூடாது. கையால் அழிக்க வேண்டும். வீட்டின் வெளிமுற்றம், சமையல் அறை, பசுவின் கொட்டகை, துளசிமாடம், பூஜை அறை இவற்றில் கோலமிட வேண்டும். அதிகாலையில் அரிசி மாவினால் கோலமிடும் போது எறும்பு போன்ற சிறு உயிரிகளின் பசியைப் போக்கிய புண்ணியம் கிடைக்கும். அதேபோல அமர்ந்தவாறும் போடுதல் கூடாது. வேலையாட்களாலும் போடுதல் கூடாது.சுபகாரியங்களின் போது இரண்டைக்கோடு வருவது போலவும் அசுபகாரியங்களின் போது ஒற்றைக்கோடு வருவது போல் போட வேண்டும்.

    பயன்கள்: தமிழர்கள் இயற்கையை அரவணைத்து வாழக்கூடியவர்கள். இந்த பூமியின் மண்ணின் தன்மை கெடாமல் இருப்பதற்காக நாம் பசு சாணத்தைத் தெளிக்கிறோம். பசு சாணத்தால் ஆன ஈரம், ஓசோன் வாயுப் படலம் சூழ்ந்திருக்கக்கூடிய சூரிய உதயத்திற்கு முன் இருக்கக் கூடிய காலகட்டத்தில் வாசல் தெளித்து பெருக்கும் போது பிராண வாயு, அதாவது முழுமையான ஆக்ஸிஜன், சுத்தமான ஆக்ஸிஜன் நமக்கு கிடைக்கிறது. மேலும் குணிந்து பெருக்குதல், குணிந்து கோலமிடுதல் இதெல்லாம் யோகாசனத்தில் ஒரு நிலையாக வருகிறது. இடுப்புப் பகுதியை வளைத்து, கழுத்தை வளைத்து, குனிந்து கரங்களால் மாவை எடுத்து கோலமிடுதல் என்பது யோகாசன அடிப்படையில் ஆரோக்கியமான சூழலைச் தரக்கூடியது. பசு சாணத்தாலோ, தண்ணீராலோ தெளிக்கும் போது வாசலில் இருக்கும் கிருமிகள் விலகுகிறது. இதனாலும் ஆரோக்கியமான சூழல் உருவாகிறது. நமது இல்லத்திற்கு தினசரி தேவர்கள், லட்சுமி வருவதாக ஐதீகம் இருக்கிறது. பச்சரிசி மாவு இடித்து அதில் கோலமிடும் போது நம்முடைய தயாள குணம் வெளிப்படும் விதமாக, எறும்பு, ஈ எல்லாம் சாப்பிடுவதற்கு தானம், தர்மம் செய்வது மாதிரியானதும் இருக்கிறது. அதனால் கோலமிடுதல் என்பது ஒரு சடங்கு சம்பிரதாயம் எல்லாம் கிடையாது. நம்ம வீட்டை நல்ல முறையில் அலங்கரித்தல் மற்றும் வரவேற்றல், உபசரிக்கும் குணம் மேலும் மங்களகரமாக இருக்கிறது என்பதற்காகவும் போடப்படுகிறது.

    சிவன் சொத்து குல நாசம்!


    வெறும், 28 கோடி ரூபாய் குத்தகைத் தொகையை வசூலிப்பதற்காக, இந்து சமய அறநிலையத் துறை, 28 ஆயிரத்து, 382 வழக்குகளை எதிர்கொண்டுள்ளது.
    கோவில் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்படக் கூடாது என்பதற்காக, "சிவன் சொத்து குல நாசம்' என ஒரு பழமொழி சொல்லி மிரட்டிப் பார்த்தனர் முன்னோர். நம் ஆட்கள், "ஊரான் வீட்டு நெய்யே, என் பொண்டாட்டி கையே' என, பதில்மொழி சொல்லி, அதைப் புறக்கணித்துவிட்டனர். இன்றைய தேதியில், வளைத்துப்போட ஏற்ற இடம், அரசு புறம்போக்கை விட, கோவில் நிலங்களே என்பது, ஆக்கிரமிப்பாளர்களின் அவதானிப்பு.இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில், 4 லட்சத்து, 78 ஆயிரத்து, 463 ஏக்கர் நன்செய், புன்செய், மானாவாரி நிலம் இருக்கிறது. இது தவிர, 22 ஆயிரத்து, 599 கட்டடங்களும், 33 ஆயிரத்து, 627 மனைகளும் உள்ளன. இவற்றில், விவசாய நிலங்களை, ஒரு லட்சத்து, 23 ஆயிரத்து, 729 குத்தகைதாரர்கள், "அனுபவித்து' வருகின்றனர்.

    நிலத்தையோ, கடையையோ குத்தகைக்கு வாங்கும்போது, அதிகாரிகளின் காலில் விழுந்து, கோவில்களுக்கு கிடா வெட்டி, உத்தரவு வாங்குபவர்கள், அதை வாங்கிய பின், கோவிலுக்கு ஒரு கற்பூரம் கூட ஏற்றுவதில்லை. "வாங்கும் வரை தான் சிவன் சொத்து; வாங்கிய பிறகு நம் சொத்து' என்ற அனுபவ உண்மை தான் அவர்களின் துணிச்சலுக்கு காரணம். குத்தகைத் தொகையை முறைப்படி கட்டுவதில்லை; குத்தகைத் தொகையை அதிகரித்தால் அதை ஏற்றுக்கொள்ளவதில்லை என்பன போன்றவை, இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள். உள்ளூர் அதிகாரிகளை சரிக்கட்டி விடுவதால், இவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. ஒருவேளை, ஏதேனும் பக்திமான் அதிகாரி உணர்ச்சிவசப்பட்டு, வழக்கும் தொடுத்துவிட்டால், மூன்று தலைமுறை வரை அவற்றை இழுத்துவிடுவர்.

    இவ்வாறு நடக்கும் வழக்கு, வம்படிகளுக்காகவே, மதுரை, கடலூர், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட ஆறு இடங்களில், வருவாய் நீதிமன்றங்களும், சேலம், மன்னார்குடி உள்ளிட்ட நான்கு இடங்களில், முகாம் நீதிமன்றங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கோர்ட்டுகளில், வெறும், 28 கோடி ரூபாய் குத்தகை நிலுவைக்காக, 28 ஆயிரத்து, 382 வழக்குகள் தொடரப்பட்டு, 13 ஆயிரத்து, 307 வழக்குகள் தீர்வு காணப்பட்டுள்ளன.இதன்படி, 12 கோடி ரூபாய், கோவில்களுக்குச் செலுத்தப்பட வேண்டும் என தீர்ப்பாகியிருக்கிறது. ஆனால், அவற்றை குத்தகைதாரர்கள் செலுத்திவிட்டனரா என்ற தகவல் இல்லை. இதுதவிர, இன்னும், 17 கோடி ரூபாய் குத்தகைப் பணம் தொடர்பாக, 15 ஆயிரத்து, 75 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றின் மீதான தீர்ப்பு, எந்த ஜென்மத்தில் வருமோ!

    கண்மூடித்தனமாக மனப்பாடம் செய்து வெற்றி பெறமுடியாது!


    ஈ அடிச்சான் காப்பி' என்பது போல், காலம் காலமாக பாடப் புத்தகங்களில் இருக்கும் கேள்விகளை, அப்படியே கேட்கும் நடைமுறையை மூட்டை கட்டிவிட்டு, மாணவர்களின் படைப்பாற்றல் திறனையும், சிந்திக்கும் திறனையும் வெளிப்படுத்தும் வகையில், சி.பி.எஸ்.இ., பாணியில் பத்தாம் வகுப்பு கேள்வித்தாளை, பள்ளிக்கல்வி இயக்ககம் வடிவமைத்துள்ளது."இந்த புதிய முறையில், மாணவர்களுக்கு சில நெருக்கடிகள் இருக்கும் என்றாலும், ஒட்டுமொத்த அளவில் வரவேற்கக் கூடிய அளவில் இருக்கிறது' என்று, ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ், முதல் முறையாக, வரும் மார்ச் மாதம் மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத உள்ளனர். இதற்காக, பாட வாரியாக கேள்வித் தாள், "புளூ பிரின்ட்'டை, பள்ளிக் கல்வித் துறை தயாரித்துள்ளது. பாடப் புத்தகங்களைத் தயாரித்த ஆசிரியர் குழுவே, இந்த கேள்வித் தாள்களையும் வடிவமைத்துள்ளது.சி.பி.எஸ்.இ., கேள்வித் தாள்களில், மாணவர்களின் திறனை வெளிப்படுத்தும் வகையிலான கேள்விகள் அதிகம் இருக்கும். நேரடியான கேள்விகள், குறைந்த அளவே இருக்கும். அதேபோல், பத்தாம் வகுப்பு கேள்வித் தாள்களை வடிவமைத்துள்ளனர்.இந்த புதிய கேள்வித் தாள் அடிப்படையிலேயே, தற்போது காலாண்டுத் தேர்வுகள் நடந்து வருகின்றன. அறிவியல், ஆங்கிலம், தமிழ் ஆகிய பாடங்களில், மாணவர்களின் சிந்திக்கும் திறனை வெளிப்படுத்தும் வகையிலான கேள்விகள் இடம்பெற்றுள்ளன.

    "புளூ பிரின்ட்'கள், மாநிலம் முழுவதும், பள்ளிகளுக்கு வினியோகிக்கப்பட்டுள்ளன. இதைப் பார்த்து, ஆசிரியர்கள் கருத்துக் கூறவும், பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி நாகராஜ முருகன், விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி குப்புசாமி ஆகியோர், ஆசிரியர்களிடம் கருத்துக் கேட்டு, அறிக்கை சமர்ப்பிக்க, பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் மணி உத்தரவிட்டுள்ளார்.அதன்படி, இந்த வாரத்திற்குள் ஆசிரியர்களிடம் கருத்துக் கேட்டு, அறிக்கையை சமர்ப்பிக்க, இரு மாவட்ட அதிகாரிகளும் திட்டமிட்டுள்ளனர். இதனடிப்படையில், தேவையான மாற்றங்களைச் செய்து, "புளூ பிரின்ட்'டை, துறை இறுதி செய்ய உள்ளது.

    மாற்றங்கள் என்னென்ன?கேள்வித் தாள் அமைப்பு குறித்து, பெயர் வெளியிட விரும்பாத ஆசிரியர்கள் கூறியதாவது: ஆங்கிலம்:மாணவர்களின் திறனை வெளிப்படுத்த, கேள்வித் தாளில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. ஆங்கிலம் இரண்டாம் தாளில் தான் வழக்கமாக, இலக்கணப் பகுதி வரும். தற்போது, முதல் தாளிலேயே இலக்கணத்தைக் கொண்டு வந்து, அதற்கு, 25 மதிப்பெண்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    * இரண்டாம் தாளில், ஏதாவது சில தலைப்புகளைக் கொடுத்துவிட்டு, அதைப்பற்றி விளக்குமாறு ஐந்து மதிப்பெண் கேள்வி அமைத்துள்ளனர்.

    * அதேபோல், சில வாசகங்களைக் கொடுத்து, அதை வைத்து விளம்பரங்களைத் தயாரிக்குமாறு ஒரு கேள்வி கேட்கின்றனர். இதுவும், ஐந்து மதிப்பெண் கேள்வி பகுதியில் இடம்பெற்றுள்ளது. முதல் தாளில், "ரூட் மேப்' என்றொரு புதிய பகுதி கேட்கப்படுகிறது. ஏதாவது, ஒரு இடத்தைக் கொடுத்துவிட்டு, ஒரு இடத்தில் இருந்து, அந்த இடத்திற்கு எப்படிச் செல்ல வேண்டும் என்பதை விளக்க வேண்டும்.

    * "பொருத்துக' என்றொரு பகுதி, வழக்கமாகக் கேட்கப்படும். இந்த முறை, இந்தப் பகுதி இல்லை. "லெட்டர் ரைட்டிங்' என்ற பகுதி வழக்கமாக இடம்பெறும். இதில், விடுநர், பெறுநர், "பாடி ஆப் தி லெட்டர்' என, ஒவ்வொன்றுக்கும் மதிப்பெண்கள் தனித்தனியாகப் பிரித்து வழங்கப்படும். மாணவர்கள், விடுநர், பெறுநர் எழுதினாலே, இரண்டு மதிப்பெண்கள் கிடைக்கும். தற்போது, விடுநர், பெறுநர் பகுதிகள், கேள்வித் தாளிலேயே வந்துவிடுகின்றன. "பாடி ஆப் தி லெட்டரை ' மட்டும் மாணவர்கள் எழுத வேண்டும். இதுதான், மாணவர்களுக்குச் சிரமம். இதனால், மாணவர்களுக்கு வழக்கமாகக் கிடைக்கும் சில மதிப்பெண்களை, புதிய முறையில் இழக்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

    * மொழிபெயர்ப்பில், ஒரு கேள்வி கேட்கப்படும். இதில், ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்க்குமாறு தான் கேள்வி இருக்கும். இப்போது, தமிழில் இருந்து, ஆங்கிலத்திற்கு மொழி மாற்றம் செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.
    தமிழில் உள்ள கருத்துக்களை, எப்படி ஆங்கிலத்தில் எழுதப் போகிறார்கள் என்று தெரியவில்லை. இதற்கு, "சாய்ஸ்' கொடுத்தால் நன்றாக இருக்கும். இப்படி, பல புதிய கேள்விகள் இடம்பெற்றுள்ளன.

    அறிவியல் : * "அ' பகுதி, "புளூ பிரின்ட்' நன்றாக உள்ளது. மற்ற பகுதிகளில், விடை அளிக்கும் வகையிலான கேள்விகள் அதிகம் இடம்பெறவில்லை. "படங்களுக்கான பாகங்களை எழுதவும்' என்று கேள்வி கேட்கப்படும். பாகங்களை மட்டும், மாணவர்கள் எழுதுவர். தற்போது, கேள்வித் தாளில் உள்ள படத்தை, விடைத் தாளில் வரைந்து, அதன்பின் பாகங்களை எழுத வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இதனால், மாணவர்களுக்கு நேரம் வீணாகும்.

    * 22வது கேள்வி, மாணவர்களின் அறிவை, மிக நுட்பமாகச் சோதிக்கும் வகையில் கேட்கப்பட்டுள்ளது. அதாவது, இதயத்தின் உள்ளமைப்பை படமாகக் கொடுத்துவிட்டு, அதில் நுரையீரலுக்கு ரத்தத்தை எடுத்துச்செல்லும் ரத்தக்குழல் எங்கே இருக்கிறது, உடலின் பிற பாகங்களுக்கு ரத்தத்தை எடுத்துச்செல்லும் ரத்தக்குழல் எங்கே இருக்கிறது என்பதை, துல்லியமாகக் குறிக்க வேண்டும். இது மிகவும் சிரமம். இதனால், 2 மதிப்பெண்களை இழக்க நேரிடும்.

    * 27வது கேள்வி, எது சரி, எது தவறு என குறிக்க வேண்டும். இது பார்ப்பதற்கு எளிதாகத் தெரிந்தாலும், பாடப் புத்தகத்தின் உள்பகுதியில், சில வரிகளைத் தேர்வு செய்து, அதில் இருந்து இந்த கேள்வி கேட்கப்படுகிறது. இதுபோன்ற, நுட்பமான கேள்விகள் பல, புதிதாக இடம்பெற்றுள்ளன.
    * பாடப் புத்தகத்தின் முழுப் பகுதியையும் முழுமையாகப் படித்தால் மட்டுமே, அறிவியல் தேர்வை நன்றாக எழுத முடியும்.

    கணிதம்: கூட்டுத் தொடர், அளவியல் ஆகிய பாடங்கள், மாணவர்களுக்கு மிகவும் சிரமமானவை. இவற்றில் இருந்து இரண்டு கட்டாயக் கேள்விகள் (கேள்வி எண் 42, 45) கேட்கப்பட்டுள்ளன. எனவே, இந்த கேள்விகளுக்கு, மாணவர்கள் அனைவரும் பதிலளிப்பார்கள் என்று கூற முடியாது. அதிகமான மாணவர்கள் விட்டுவிடக் கூடிய நிலைதான், தற்போது இருந்து வருகிறது. எனவே, கணிதப் பாடத்தில், "சென்டம்' குறைய வாய்ப்புகள் அதிகம்.

    தமிழ்: * தமிழ் இரண்டாம் தாளில், ஒரு பாடலைக் கொடுத்து, இது என்ன, "பா' என்று கேட்கின்றனர். இரண்டு மதிப்பெண் பகுதியில் கேட்கப்பட்டுள்ள இக்கேள்வி, மாணவர்களுக்குச் சிரமமாக இருக்கும்.எட்டு வரிகளில் கவிதை எழுதுக என்று, ஏதாவது ஒரு தலைப்பு கொடுக்கின்றனர். இதேபோன்ற கேள்வி, பிளஸ் 2விலும் வருகிறது. 500 மாணவர்களில், ஒரு மாணவர் தான், இந்த கவிதையை எழுதுகிறார். மாணவர்களில், மிகச் சிலருக்கே கவிதை எழுதும் ஆற்றல் இருக்கும்.

    * சமூக அறிவியல் கேள்வித் தாள், நன்றாக அமைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, பாட ஆசிரியர்கள் தெரிவித்தனர். மாணவர்களுக்கு "அல்வா' :"இனிமேல், மாணவர்கள், "பிட்' அடிப்பதற்கே வழியிருக்காது' என்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

    இது குறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது:வழக்கமாக, விரிவாக விடை அளிக்கும் வகையிலான கேள்விகள் தான், அதிகம் இடம்பெறும். அதனால், எந்தக் கேள்வி வரும் என்பதை, ஓரளவு யூகித்து, அதற்கான விடைகளை எடுத்துச்சென்று, தேர்வில் "பிட்' அடிப்பர். ஆனால், புதிய கேள்வித் தாள் அமைப்பு, மிக நுட்பமாக, கேள்விகள் எந்த மூலையில் இருந்து வரும் என்பதையே கணிக்க முடியாத அளவிற்கு இருக்கிறது. அதனால், "பிட்'டும் அடிக்க முடியாது.இவ்வாறு, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

    இணையத்தில் "புளூ பிரின்ட்' : பாட வாரியான, "புளூ பிரின்ட்' விரைவில், பள்ளிக் கல்வித் துறை இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளன. எனவே, பகுதி வாரியாக கேட்கப்படும் கேள்விகள் மாதிரிகளை, மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.ஆசிரியர்களுக்கு பயிற்சி: பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் மணி கூறும்போது, "சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ், ஆசிரியர்களுக்கு விரைவில் பயிற்சி அளிக்கப்படும். 6,7,8ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு, அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்ககத்தின் சார்பிலும், 9,10ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு, மத்திய இடைநிலைக் கல்வித் திட்ட இயக்ககம் மற்றும் ஆசிரியர் கல்வி இயக்ககம் ஆகிய இரு துறைகள் சேர்ந்தும் பயிற்சி அளிக்கும். இதற்கான திட்டங்களை, சம்பந்தப்பட்ட துறைகள் வகுத்து வருகின்றன' என்றார். 

    அரசுக்கு நம்பிக்கை துரோகம்: ராஜா மீது சி.பி.ஐ!


    2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா மீது ஏற்கனவே சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளோடு, புதிதாக, அரசுக்கு நம்பிக்கை துரோகம் செய்ததாக, குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ராஜா, கனிமொழிக்கு ஜாமின் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    "2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகியுள்ள ராஜா, கனிமொழி உள்ளிட்ட பலரும், பல மாதங்களாக, சிறையில் இருந்து வருகின்றனர். இவர்கள், ஜாமினில் வெளிவருவது எப்போது என்ற கேள்வியும் இருந்து வருகிறது. குறிப்பாக, கனிமொழியை எப்படியாவது ஜாமினில் கொண்டு வந்துவிட வேண்டுமென, தி.மு.க., தலைமை தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளது. இந்த சூழ்நிலையில், டில்லி பாட்டியாலா கோர்ட்டில், நேற்று அதிரடி திருப்பம் நிகழ்ந்தது.

    இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜா, தொலைத்தொடர்பு துறை முன்னாள் செயலர் பெகூரியா, ராஜாவின் தனிச் செயலர் சந்தோலியா ஆகிய மூன்று பேர் மீது, சி.பி.ஐ.,யின் வழக்கறிஞர் லலித், தான் இவ்வழக்கில் புதிய குற்றச்சாட்டை பதிவு செய்வதாக தெரிவித்தார்.அதன்படி ராஜா, பெகுரியா, சந்தோலியா ஆகிய மூவரும், இந்திய தண்டனை சட்டம் பிரிவு, 409ன் கீழ், குற்றம் இழைத்திருப்பதாக குறிப்பிட்டார். "2ஜி' ஸ்பெக்டரம் என்பது, அரசின் சொத்து. இதை பகிர்ந்தளிப்பதற்குண்டான உரிமையும் தகுதியும் உள்ள பதவிகளில் இந்த மூவரும் இருந்தனர்.ஆனால், இவர்கள் நேர்மையற்ற வகையில் தங்களது உரிமையை பயன்படுத்தியுள்ளனர்.

    ஸ்பெக்ட்ரத்தை பகிர்ந்தளிப்பது தொடர்பான கொள்கையை, சட்டவிரோதமாக மீறியுள்ளனர். தகுதியற்ற சில கார்ப்பரேட் நிறுவனங்கள், தவறான வழியில் பலன் பெறும்வகையில், இவர்கள் நடந்து கொண்டுள்ளனர்.இவர்கள் மீது, ஏற்கனவே சில பிரிவுகளில் குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ள நிலையில், "அரசுக்கு நம்பிக்கை துரோகம் செய்திருக்கின்றனர்' என்ற, குற்றச்சாட்டையும் பதிவு செய்கிறேன்.இவ்வாறு லலித் கூறினார்.

    ஸ்பெக்ட்ரம் வழக்கில் இரண்டு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன. அதற்கு பிறகு இதுவரை எந்த குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை.குற்றப்பத்திரிகை தாக்கல் முடிந்து, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் அவர்களது வாதங்களும் கடந்த சில வாரங்களாக கேட்கப்பட்டன.இந்த வாதங்களும் கேட்டு முடிக்கப்பட்டுவிட்டதால், ஸ்பெக்ட்ரம் வழக்கின் குற்றப் பின்னணியை தொகுக்கும் பணிகள் ஆரம்பமாகி நடைபெறும். அந்த தொகுப்பு பணிகள் முடிந்துவிட்டால் அதற்கு பிறகு வாத பிரதிவாதங்கள் முறைப்படி கோர்ட்டில் துவங்கும்.

    இந்த வழக்கமான காரணங்களால் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு ஜாமின் கிடைக்காத நிலையும் இருந்து வந்தது. குற்றப்பின்னணி தொகுப்பு பணிகளை, வரும் 30ம் தேதி துவங்க இருப்பதாக நீதிபதி ஏற்கனவே கூறியிருந்தார். இப்பணிகள் ஆரம்பமாகி விட்டால் ஜாமின் கிடைப்பது எளிதாக இருக்கும்.இதனால், குற்றம்சாட்டப்பட்டு நீண்டநாட்கள் சிறையில் இருந்து வரும் ராஜா, கனிமொழி, சரத்குமார், பெகூரியா, சந்தோலியா, சரத்குமார் என பலரும், மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். எப்படியும், வரும் 30ம் தேதிக்கு பின், ஜாமினில் வெளிவந்துவிடலாம் என்ற இவர்களது நம்பிக்கை நேற்று பொய்த்துப்போனது.

    திருப்பம்: சி.பி.ஐ.,யின் புதிய குற்றச்சாட்டையும் கூடுதலாக கோர்ட் ஏற்றுக் கொண்டுள்ளதால், பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த புதிய குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க கால அவகாசம் வேண்டுமென ராஜா தரப்பில் கேட்கப்பட்டு, அதன்படி, வரும் 30ம் தேதி நாள் குறிக்கப்பட்டுள்ளது.அப்போது, ராஜா உள்ளிட்ட மூன்று பேரும் தங்களது வாதங்களை அடுக்குவார்கள், இந்த வாதங்கள் கேட்கும் பணி எப்படியும் ஒரு மாத காலம் நீடிக்கும். அதன்பிறகுதான் குற்றப்பின்னணியை தொகுப்பை நீதிபதி ஆரம்பிக்க இயலும்.இத்தகைய பின்னணி காரணங்களால் ராஜாவுக்கும் சரி,கனிமொழிக்கும் சரி ஜாமின் கோருவதிலும் அது கிடைப்பதிலும் மேலும் காலதாமதம் ஆகலாம்.

    குற்றம் நிரூபணமானால் ஆயுள் தண்டனையா? நேற்றைய புதிய பிரிவின் கீழ் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு என்பது சாதாரணமானது அல்ல. அரசாங்க பதவிகளில் இருப்பவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமைகளை தவறாகக் கையாண்டால், அவர்கள் மீது இந்த பிரிவின் கீழ் குற்றம் சுமத்தப்படும்.அதன்படி, இ.பி.கோ., பிரிவு 409ன் கீழ் குற்றம் சுமத்தப்பட்டு, அது நிரூபிக்கப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ கிடைக்கவும் வாய்ப்புள்ளது. அத்தகைய கடுமையான பிரிவின் கீழ், ராஜா இப்போது சிக்கியுள்ளார் என்பதால் புதிய பரபரப்பு கிளம்பியுள்ளது.

    இதே நாள்...


  • சர்வதேச சுற்றுலா தினம்
  •  இந்திய விடுதலைப் போராட்ட வீரர் பகத் சிங் பிறந்த தினம்(1907)
  •  இந்திய ஆன்மிகவாதி மாதா அம்ருதானந்தமயி பிறந்த தினம்(1953)
  •  கூகுள் தேடுபொறி ஆரம்பிக்கப்பட்டது(1998)
  •  உலகின் முதலாவது பயணிகள் ரயில் இங்கிலாந்தில் சேவைக்கு விடப்பட்டது(1825)
  • தயாநிதி மீதான டெலிபோன் இணைப்பு முறைகேடு விசாரணை துவக்கம்!


    மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி இருந்தபோது, சென்னையில் உள்ள அவரின் வீட்டிற்கு 300 தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட்டதாகவும், அந்த இணைப்புகள் சன் "டிவி'க்கு சட்ட விரோதமாக பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்ட புகார் குறித்து, நான்கு ஆண்டுகளுக்குப் பின், சி.பி.ஐ., விசாரணையை துவக்கியுள்ளது.

    இது தொடர்பாக பி.டி.ஐ., செய்தி ஏஜன்சி வெளியிட்டுள்ள செய்தி:மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி பதவி வகித்த காலத்தில், சென்னையில் உள்ள அவரின் போட் ஹவுஸ் இல்லத்திற்கு, பி.எஸ்.என்.எல்., பொது மேலாளர் பெயரில், 323 தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட்டன. சன்"டிவி' அலுவலகத்தில் இருந்து பூமிக்கு அடியில் தயாநிதியின் வீட்டிற்கு அமைக்கப்பட்ட பிரத்யேக கேபிள்கள் மூலம், இந்த தொலைபேசி இணைப்புகள் எல்லாம் சட்ட விரோதமாக பயன்படுத்தப்பட்டன. இந்த தொலைபேசி இணைப்புகள் எல்லாம், கட்டணம் அதிகமான ஐ.என்.டி.என்., வசதிகளை கொண்டிருந்தன. அதன் மூலம் சன் "டிவி'க்குத் தேவையான தகவல்கள், செய்திகள் மற்றும் "டிவி' நிகழ்ச்சிகள், உலகம் முழுவதிலும் இருந்து வெகு விரைவாகப் பெறப்பட்டன என்று சில தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

    இது தொடர்பாக முதலில் விசாரணை நடத்திய சி.பி.ஐ., தொலைத்தொடர்பு செயலரிடம், அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது. அதில், "தயாநிதியின் வீட்டிற்கு வழங்கப்பட்ட தொலைபேசி இணைப்புகள் எல்லாம், வர்த்தக நிறுவனங்களால், வீடியோ கான்பரன்சிங்கிற்கும், பெரிய அளவிலான டிஜிட்டல் தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்ளவும் பயன்படுத்தப்பட்டுள்ளன.இவற்றுக்கு மற்ற நிறுவனங்கள் எனில், அதிக கட்டணம் செலுத்த நேரிடும். ஆனால், தயாநிதி அமைச்சர் பொறுப்பில் இருந்ததால், இவற்றை எல்லாம் சன் "டிவி' இலவசமாக பயன்படுத்தியுள்ளது.

    இந்த தொலைபேசி இணைப்புகள் மூலம் நடந்த பரிமாற்றங்கள் எல்லாம், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட அலுவலர் ஒருவரின் துணையோடு நடந்துள்ளன. பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் வேறு யாருக்கும் இந்த விவரம் தெரியாது' என்றும் கூறப்பட்டிருந்தது.கடந்த 2007ம் ஆண்டில் சமர்ப்பித்த இந்த பரிந்துரைகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, தொலைத்தொடர்புத் துறை செயலரையும் சி.பி.ஐ., கேட்டுக் கொண்டது. ஆனால், துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், இந்த விவகாரம் தொடர்பாக, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது முதற்கட்ட விசாரணை நடத்த சி.பி.ஐ., முடிவு செய்துள்ளது. 

    LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...