மத்தியப் பிரதேசத்தில் பியூன் ஒருவரிடம் 12 கோடி ரூபாய் சொத்து இருப்பது தெரியவந்துள்ளது. உஜ்ஜைன் நகராட்சியில் நான்காம் நிலை ஊழியராக பணியாற்றும் நரேந்திர தேஷ்முக் என்பவரின் வீட்டை லோக்ஆயுக்த போலீசார் சோதனையிட்டதில் இது தெரியவந்துள்ளது. லோக்ஆயுக்த எஸ்பி அருண் மிஷ்ரா தலைமையில் 15 பேர் கொண்ட குழுவினர் நரேந்திர தேஷ்முக்கின் வீட்டில் சோதனை நடத்தினர். தேஷ்முக் பியூனாக இருந்தாலும் அவரிடம் 2 வீடுகள், ஏராளமான ஏக்கர் நிலங்கள், ஒரு கோழிப் பண்ணை மற்றும் ஒரு பண்ணை வீடு ஆகியவை அவரிடம் உள்ளதாக ஆவணங்கள் குறிப்பிடுகின்றன என மிஷ்ரா தெரிவித்தார். மேலும் மும்பையில் உள்ள ஒரு ஹோட்டல் மற்றும் ஒரு தொழிற்சாலையில் அவருக்கு பங்கு உள்ளது. 10 வங்கிக் கணக்குகளை அவர் பராமரித்து வருகிறார். மகாராஷ்டிராவின் ஜல்காவோன் மாவட்டத்திலும் அவருக்கு நிலம் உள்ளது சோதனையின் மூலம் தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment