இந்தியாவில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள் குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் அரசிடம் இல்லை என்று மனிதவளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பதிலளித்து மத்திய மனிதவள இணையமைச்சர் புரந்தேஸ்வரி, "இந்தியாவில், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் வருகை மற்றும் செயல்பாடு ஆகியவற்றை வரைமுறைப்படுத்துவதற்கான சட்டம் என்று எதுவுமில்லாத நிலையில், அந்த வெளிநாட்டுப் பல்கலைகளின் செயல்பாடுகள் குறித்து, அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் அரசிடம் இல்லை. அதேசமயம், அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில்(AICTE), வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடன் இணைந்து, தொழில்நுட்ப கல்வியை வழங்குவதற்கான விதிமுறையை வகுத்துள்ளது.
இந்த விதிமுறைகளின்கீழ், இதுவரை மொத்தம் 6 கல்வி ஒத்துழைப்பு ஒப்பந்தங்களை AICTE அங்கீகரித்துள்ளது. வெளிநாட்டுப் பல்கலைகள் இந்தியாவில் இயங்குவது குறித்த எந்த ஆய்வையும் அரசு நடத்தவில்லை. அதேசமயம், இந்தியாவின் நிகர்நிலைப் பல்கலைகளில் ஒன்றான கல்வி திட்டமிடுதல் மற்றும் நிர்வாகத்திற்கான தேசியப் பல்கலைக்கழகம், ஒத்துழைப்பை ஏற்படுத்தியுள்ள 143 இந்தியக் கல்வி நிறுவனங்களையும், 161 வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களையும் அடையாளம் கண்டுள்ளது. ஒத்துழைப்புகளின் மொத்த எண்ணிக்கை 230. அவற்றில் 86 ஒப்பந்தங்கள் பிரிட்டன் கல்வி நிறுவனங்களுக்கும், 79 அமெரிக்க கல்வி நிறுவனங்களுக்கும் உரியவை" என்று அமைச்சர் கூறினார்.
No comments:
Post a Comment