2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தனது தரப்பு சாட்சியத்தை விளக்குவதற்கு ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமிக்கு சி.பி.ஐ. நீதிமன்றம் இன்று காலை அனுமதி அளித்தது. தம்பரத்துக்கு எதிரான புகார் குறித்து டிசம்பர் 17-ம் தேதி சுவாமி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது. சுவாமியின் விளக்கத்துக்குப் பிறகு 2ஜி ஊழல் வழக்கில் மத்திய அமைச்சர் சிதம்பரத்தையும் துணைக் குற்றவாளியாக சேர்க்க வேண்டுமா என்பதை நீதிமன்றம் முடிவுசெய்யும். மேலும் சிதம்பரத்துக்கு எதிரான தனது புகார் குறித்து விசாரிக்க 2 சாட்சிகளிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று சுவாமி கோரிக்கை விடுத்திருந்தார்.
சிபிஐ இணை இயக்குநர் ஒருவரையும், நிதித்துறை இணைச் செயலர் ஒருவரையும் சாட்சிகளாக விசாரிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து சுவாமி கூறுகையில், என்னுடைய மனுவை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. முதலில் என்னிடம் விசாரணை நடத்த உள்ளது. 2 அதிகாரிகளை விசாரிக்க வேண்டும் என்று நான் விருப்பம் தெரிவித்துள்ளேன். டிசம்பர் 17-ம் தேதி நான் சாட்சிக் கூண்டில் நின்று சாட்சியம் அளிப்பேன். அதன்பின்னர் 2 அதிகாரிகளை சாட்சியம் அளிக்க அழைப்பதா வேண்டாமா என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கும் எனத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment