கருத்தரிப்பு, உயிர் கொல்லி நோய் தடுப்பு போன்ற முன்எச்சரிக்கை
நடவடிக்கையில் மக்கள் எந்த அளவிற்கு விழிப்புணர்வுடன் உள்ளனர் என்பதை
கண்டறிய, “பொதுமக்கள் விழிப்புணர்வு இயக்கம்” உலக அளவில் ஆய்வு
மேற்கொண்டது. அதில் இந்தியர்களில் 40 சதவிகிதம்
பேர் மட்டுமே கருத்தடை சாதனங்களை பயன்படுத்துகின்றனர் என்று தெரிய
வந்துள்ளது. கர்ப்பம் தரிக்கும் அபாயத்தை சந்திக்க விரும்பவில்லை என்று
அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
72 சதவிகிதம் பேர்
கருத்தடை சாதனங்களை பயன்படுத்துவதில்லை. இவர்களிடம் கர்ப்பம் தரிப்பது
குறித்த கவலை எதுவும் காணப்படவில்லை. எய்ட்ஸ் மற்றும் பாலியல் தொடர்பான
நோய்களின் ஆபத்து பற்றி அவர்கள் கவலைப்படவும் இல்லை. இளைய தலைமுறையினர்
இடையே கருத்தடை சாதனங்களின் பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு போதுமான அளவில்
இல்லை.
திட்டமிடப்படாத கருத்தரிப்புதான் உலக அளவில்
பெரிய கவலையை ஏற் படுத்தி இருக்கிறது. உலக அளவில் ஆண்டு தோறும் 20.8
கோடிப் பேர் கருத்தரிக்கின்றனர். அவர்களில் 41 சதவிகிதம் பேர் முன்
கூட்டியோ சிக்காமலேயே கருத்தரிப்புக்கு ஆளாகின்றனர். ஆஸ்திரேலியா, சிலி,
கொலம்பியா, இங்கிலாந்து, இந்தோனேசியா, லூதியானா, மெக்சிகோ, போலந்து,
சிங்கப்பூர், சுவீடன், துருக்கி போன்ற நாடுகளில் 40 சதவிகிதம் பேர்
பாதுகாப்பில்லாத உறவை வைத்துள்ளனர்.
சீனா,
எத்தியோப்பியா, கென்யா, நார்வே, தாய்லாந்து போன்ற நாடுகளில் இது 50
சதவிகிதமாக உள்ளது. இதுபற்றி இந்திய குடும்ப கட்டுப்பாடு சங்க
பொதுச்செயலாளர் விஸ்வநாத் கோலிவாட் கூறுகையில், கருத்தடை சாதனங்கள் பற்றிய
விழிப்புணர்வு இல்லாததால், இவற்றை எவ்வாறு பயன்படுத்து வது என்று
பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை.
இந்தியாவில்
இதுதான் பெரிய பிரச்சினையாக உள்ளது. குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை ஆணும்,
பெண்ணும் தீவிரமாக எடுத்துக் கொள்வது அவசியம். கருத்தடை சாதனங்களில் எதை
தேர்ந்து எடுப்பது என்பதை பார்ட்னர்கள் இருவரும் முடிவு செய்து தெரிவு
செய்து கொள்ள வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment