தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் இயக்குநர்கள் கேயார் மற்றும் எஸ் ஏ சந்திரசேகரன் மோதுகிறார்கள். தயாரிப்பாளர்
சங்க தலைவர் பதவியில் இருந்து ராமநாராயணன் விலகியதை அடுத்து புதிய
நிர்வாகிகளை தேர்வு செய்ய அடுத்த மாதம் (அக்டோபர்) 9-ந்தேதி தேர்தல் நடைபெற
உள்ளது. தலைவர், இரண்டு துணைத் தலைவர்கள், 2 செயலாளர்கள், 1
பொருளாளர், 21 செயற்குழு உறுப்பினர்கள் இந்த தேர்தலில் தேர்வு செய்யப்பட
உள்ளனர். 770 தயாரிப்பாளர்கள் ஓட்டு போட்டு இவர்களை தேர்வு செய்கிறார்கள். தேர்தலில்
தலைவர் பதவிக்கு எஸ்.ஏ. சந்திரசேகரன், கே.ஆர். ஆகியோர்
போட்டியிடுகிறார்கள். எஸ்.ஏ. சந்திரசேகரன் தற்போது சங்கத்தில் பொறுப்புத்
தலைவராக இருக்கிறார். அவர் இன்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.
இந்த முறை எஸ்.ஏ. சந்திரசேகரன், கே.ஆர். தலைமையில் இரண்டு அணிகள் மோதுகின்றன. எஸ்.ஏ.
சந்திரசேகரன் அணியில் துணைத் தலைவர் பதவிக்கு புஷ்பா கந்தசாமி,
ராதாகிருஷ்ணன் ஆகியோரும், செயலாளர் பதவிக்கு கே.ஆர்.ஜி., தேனப்பன்
ஆகியோரும், பொருளாளர் பதவிக்கு தாணுவும், செயற்குழு உறுப்பினர் பதவிக்கு
ராதாரவி, கோவைத்தம்பி, சங்கிலி முருகன், மாதேஷ், ஆர்.கே. செல்வமணி,
சந்திரபிரகாஷ் ஜெயின், எடிட்டர் மோகன், அமுதா துரைராஜ், மைக்கேல் ராயப்பன்,
ரிஷிராஜ், பவித்ரன் உள்பட 21 பேரும் போட்டியிடுகின்றனர்.
No comments:
Post a Comment