மகாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம்
உள்ளிட்ட புண்ணிய நீர் நிலைகளில் ஏராளமானோர் புனித நீராடி மூதாதையர்களுக்கு
பித்ரு பூஜை செய்து வழிபட்டனர்.
இதிகாசங்களில் பித்ரு பூஜை: நமது
முன்னோர்கள் தெய்வத்திற்கு சமமானவர்கள். பூமியில் வாழ்ந்து மடியும் நம்
மூதாதையர்களின் பூத உடல் தான் மறைகிறது. ஆனால் ஆன்மாவானது தனது சூட்சும
உருவில் இருந்து அருளாசி வழங்கி தன் குலத்தை காத்து வருகின்றார்கள். எனவே
பித்ரு பூஜை நமது முன்னோர்களால் மிகவும் சிறப்பாக செய்யப்பட்டு வந்துள்ளது.ஸ்ரீராமர்
தன் தந்தையான தசரதனுக்கும், கிருஷ்ணன் தன் மூதாதயர் அனைவருக்கும் இவ்வாறு
தர்பணம் செய்ததாக நமது இதி காசங்கள் கூறுகின்றன. ஆனால் இக்காலத்திலோ
சூரியனின் ஒளியை விட அதிக பிரகாசமாக உலாவரும் அவர்களை நம் கண்களால் காண
இயலாத நிலையில் நமது வாழ்வியல் தன்மை அமைந்துள்ளதால் மானசீகமாக பூஜை
செய்து, நாம் தரும் திதி நமது முன்னோர்களை மகிழ்விக்கின்றதுநாம்
தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் செய்யும் போது ஐந்து பிதுர் தேவதைகளை
வரவேற்கின்றோம். நம் பித்ருக்கள் (மண்), புரூரவர் (நீர்), விசுவதேவர்
(நெருப்பு), அஸீருத்வர் (காற்று), ஆதித்யர் (ஆகாயம்) என பஞ்ச பூத அம்சமாக
ஐவரும் ஒரு சேர பூமிக்கு வருவது மகாளய பட்சத்தில் தான் என கருட புராணம்
விளக்கமாக கூறுகின்று. திரேதா யுகத்திலும், கிருதாயுகத்திலும் மகாளய பட்ச
நாட்களில் மூதாதையர்கள் நேரில் தரிசனம் தந்து உணவு பெற்று வாழ்த்தி
சென்றதாக புராணங்கள் கூறுகின்றன.வம்சம் செழிக்கும்: சாதாரண
அமாவாசையிலும், நினைவு நாட்களிலும் நாம் தரும் திதி
சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும் தருவது. ஆனால் மகாளய பட்சத்தின்
வழிபாடும், மகாளய அமாவாசை அன்று நாம் செய்யும் பூஜையும் நம்மீது அக்கறை
கொண்டு உதவியவர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள், குருமார்கள், இப்பூவுலகில்
சாஸ்திர உணர்வு பெற, வாழ்வியல் தெளிவு பெற நமக்கு உதவிய அத்துனை
ஆன்மாக்களையும் மகிழ்ச்சி அடையச் செய்கிறது. எனவே அத்தனை பித்ருக்களும் ஆசி
வழங்குவது இந்த மகாளய பட்ச விரத நாட்களில் தான். எனவே மறைந்த நண்பர்கள்,
தாய் வழி, தந்தை வழி உறவினர்கள் சித்தப்பா, பெரியப்பா முதல் தங்கள்
குடும்பத்திற்கு உதவிய அத்தனை ஆன்மாக்களுக்கும் என வேண்டி மகாளய அமாவாசை
அன்று குறைந்தது ஒரு ஜோடி ஆண்-பெண் முதியவர்களுக்கும், ஊனமுற்றவர்களுக்கும்
நீங்கள் வஸ்திர தானம் செய்து உணவளித்து செலவுக்கு கொஞ்சம் பணமும் கொடுத்து
உதவினால் வாழ்வும், வம்சமும் சிறக்கும்.
தீராத வியாதிகள் தீரும்: மகாளய
அமாவாசையில் பால், தயிர், நெய், தேன், பழங்களை நிவேதனமாக வைக்கலாம்.
பலகாரம், சாதவகைகளையும் படையல் செய்யலாம். வசதி குறைந்துள்ளவர்கள் மூதாதயரை
மனதில் நினைத்து அகத்திக் கீரையை பசு மாட்டிற்கு உணவாகத் தந்தாலே போதும்
முதியவர்கள் இருவருக்காவது உணவும், ஆதரவற்றவர்களுக்கு துணிமணியும் வயிறார
உணவளியுங்கள். அமாவாசையில் குல மூதாதையர்களை நினைத்து செய்யும் தான
தர்மங்கள் அவர்களை சந்தோஷப்படுத்துவதுடன் நோய் நொடிகள் அகலும், நீண்ட
ஆயுளும், நிறைந்த செல்வமும், மங்காத புகழும் அமையும். இப் பூஜையால் தீராத
கடன் ஒழியும். தீர்க்க முடியாத வியாதிகள் குறையும். யார் விட்ட சாபமோ என
அஞ்சிய வாழ்க்கை அகலும் என்று முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். நாமும்
நம்முன்னோர்களுக்கு மகாளய அமாவசை தினத்தன்று பூஜை செய்து அவர்களின் ஆசி
பெறுவோம்.
No comments:
Post a Comment