சாம்பியன்ஸ் “லீக்” 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பெங்களூர், ஐதராபாத்,
சென்னை ஆகிய 3 இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டியில்
இறுதிப்போட்டி, அரை இறுதி உள்பட 10 ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கம்
மைதானத்தில் நடக்கிறது. கடந்த 24-ந்தேதி
சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில் கேப்கோப்ராஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில்
நியூசவுத் வேல்ஸ் அணியையும், மும்பை இந்தியன்ஸ் 3 விக்கெட்
வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியையும் தோற்கடித்தன.
3
நாள் இடைவெளிக்கு பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் நாளை (28-ந்தேதி) 2
ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 4 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் “ஏ” பிரிவில்
உள்ள நியூசவுத் வேல்ஸ்- டிரினிடாட் டொபாக்கோ அணிகள் மோதுகின்றன. இரு
அணிகளுமே முதல் ஆட்டத்தில் தோல்வியை தழுவி இருந்தன.
நியூசவுத்
வேல்ஸ் அணி 7 விக்கெட்டில் கேப்கோப்ராசிடமும் டிரினி டாட் அணி 1
விக்கெட்டில் மும்பை இந்தியன்சிடமும் தோற்றது. இதனால் இரு அணிகளும் முதல்
வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளன. இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில்
“ஏ” பிரிவில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ்- கேப்கோப்ராஸ் (தென் ஆப்பிரிக்கா)
அணிகள் மோதுகின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ் தொடக்க
ஆட்டத்தில் மும்பை இந்தியன்சிடம் தோற்று இருந்தது. வெற்றி பெற வேண்டிய
ஆட்டத்தில் சூப்பர் கிங்ஸ் தோற்றது. மலிங்கா கடைசி நேரத்தில் சிறப்பாக
விளையாடி சென்னை அணியின் வெற்றியை பறித்தார். மும்பையிடம் தோற்ற
அதிர்ச்சியில் இருக்கும் சூப்பர் கிங்ஸ் முதல் வெற்றியை பெறும் ஆர்வத்தில்
உள்ளன. தொடக்க வீரர் மைக் ஹஸ்சி, கேப்டன் டோனி பேட்டிங்கில் நல்ல நிலையில்
உள்ளனர்.
கடந்த போட்டியில் மிடில் ஆர்டரில்
விளையாடிய பத்ரிநாத் சொதப்பிவிட்டார். இதனால் அதிரடியாக ஆட வேண்டிய
கட்டாயத்திவ்ல் சூப்பர் கிங்ஸ் வீரர்கள் உள்ளனர். கேப்கோப்ராஸ் அணி சென்னை
அணிக்கு சவாலானது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் நியூசவுத் வேல்ஸ் அணியை
வென்று இருந்தது.
2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில்
உள்ளது. கேப்டன் கெம்ப், டுமினி, கிப்ஸ், பீட்டர்சன் போன்ற சிறந்த
வீரர்கள் உள்ளனர். இந்த ஆட்டம் ஸ்டார் கிரிக்கெட் சேனலில் நேரடியாக
ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இரு அணி வீரர்கள் விவரம்:-
சென்னை
சூப்பர் கிங்ஸ்: டோனி (கேப்டன்), முரளி விஜய், மைக் ஹஸ்சி, ரெய்னா,
பத்ரிநாத், அல்பி மார்கன், ஜகாட்டி, அஸ்வின், பிராவோ, போலிஞ்சர், அணிருதா
ஸ்ரீகாந்த், குலசேகரா, சுரஜ் ரந்தீவ், விர்த்திமான் சகா, ஸ்டைரிஸ்.
கேப்கோப்ராஸ்: ஜஸ்டின் கெம்ப் (கேப்டன்), கிப்ஸ், டுமினி, ஜஸ்டின் ஆன்டாங்,
ஓவாசிஸ் ஷா, ஸ்டெயன், டெனி விலாஸ், மைக்கேப் ரிப்பன், ஆண்ட்ரூபுட்டிக்,
ராபின் பீட்டர்சன், பிலான்டர், ஜான் லோவ், ரிச்சர்டு லெவி, லாங்வெல்ட்,
ரோளகெலின் வெலட்.
No comments:
Post a Comment