தமிழகத்தில் உள்ள தபால் நிலையங்களில் மினி பிரிட்ஜ் விற்பனை துவங்கியுள்ளது. கடித
போக்குவரத்தில் மட்டுமே ஈடுபட்டு வந்த தபால் துறை இன்று பல துறைகளில் தடம்
பதித்து வருகிறது. மியூச்சுவல் பன்ட் துவங்கி தங்கம் வரை விற்பனை செய்து
வருகிறது. அடுத்த கட்டமாக வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனையில் கவனம்
செலுத்தி வருகிறது. சென்னை போன்ற முக்கிய நகரங்களில் உள்ள தபால்
நிலையங்களில் மினி பிரிட்ஜ் விற்பனை கடந்த சில நாட்களுக்கு முன்பு
துவங்கப்பட்டது.
நெல்லையிலும் மினி பிரிட்ஜ் விற்பனயைத் துவங்க
அதிகாரிகள் திட்டமிட்டனர். இதையடுத்து கோத்ரேஜ் நிறுவனத்துடன் இணைந்து மினி
பிரிட்ஜ் விற்பனை துவங்கப்பட்டது. 43 லிட்டர் கொள்ளவு கொண்ட இந்த மினி
பிரிட்ஜில் 4 முதல் 5 ஒரு லிட்டர் பாட்டில்கள், 2 முதல் 3 கிலோ காய்கறிகள்,
2 லிட்டர் வரை பால், 3 பாத்திரங்கள் வைக்கலாம்.
8.9 கிலோ எடை கொண்ட
இந்த மினி பிரிட்ஜ் 230 வோல்ட் மின்சாரத்திலும், இன்வென்டரிலும்
செயல்படும். இதை வியாபாரத்திற்கும், வீட்டு உபயோகத்திற்கும்
பயன்படுத்தலாம். இதன் விலை ரூ. 3,790 ஆகும். இந்த மினி பிரிட்ஜை எங்கு
வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம். நெல்லை கோட்டத்தில் உள்ள தபால்
நிலையங்களில் ரூ. 3,790 செலுத்தினால் 5 நாட்களுக்குள் மினி பிரிட்ஜ் வீடு
தேடி வரும் என்று பாளையங்கோட்டை தபால் துறை அலுவலர் கனகசபாபதி
தெரிவித்தார்.
No comments:
Post a Comment