தமிழ்நாட்டில், வறுமை கோட்டுக்கு கீழ் வசிக்கும் ஏழை, எளிய
குடும்பங்களுக்கு, இலவச செல்போனுடன், வாழ்நாள் முழுவதும் பேசும் வகையிலான
மொபைல் இணைப்பை, பி.எஸ்.என்.எல். வழங்குகிறது.
தமிழகத்தில்
திமுக அரசு ஏராளமான இலவசத்திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இந்தப் பாணியை
இப்போது மத்திய அரசும் பின்பற்றத் துவங்கியுள்ளது. சமீபத்தில் கூட தமிழக
அரசின் இலவச எரிவாயு - அடுப்புத் திட்டத்தை நாடு முழுக்க அமலாக்கப் போவதாக
அறிவித்தது.
இதைத்தொடர்ந்து, அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா
காந்தியின் வழிகாட்டுதலின் பேரில், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான
மத்திய அரசு, வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் ஏழை மக்களுக்கு இலவசமாக
செல்போனும், பிஎஸ்என்எல் செல்போன் இணைப்பும் திட்டமிட்டுள்ளது.
இந்த
திட்டத்தில், வறுமை கோட்டுக்கு கீழ் வசிப்பவர்களுக்கு, எல்.ஜி.
செல்போனும், அதற்கான பிரி-பெய்டு இணைப்புக்கான 'சிம்' கார்டும் இலவசமாக
வழங்கப்படும். வாழ்நாள் முழுவதும், வெளியில் இருந்து வரக்கூடிய அழைப்புடன்
பேசிக்கொண்டே இருக்கலாம்.
No comments:
Post a Comment